விவேக் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் அளித்த விளக்கம் !

0

நடிகர் விவேக் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப் பார்க்கப்படுகிறது. ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

விவேக் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் அளித்த விளக்கம்  !
அதை செய்தவர் விவேக்'' என்ற கமலின் வார்த்தைகள் விவேக்குக்கு பொருத்தமானதாக இருக்கும். அவரது சமூக அக்கறையால் 'சின்னக்கலைவாணர்' என்ற பெயர் கிடைத்தது அவருக்கு. 

சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் அவர் திரைப்படத்தை முற்போக்கு கருத்துக்களுக்கு பயன்படுத்தியது யாருக்குமே கிடைக்காத அப்பெயரை அவருக்கு பெற்றுத் தந்தது. 

ஆனால் வாழ்க்கையிலும் 'சின்னக்கலைவாணர்' என்பது தொடர வேண்டுமா என்பது தான் அனைவரது கேள்வியாக உள்ளது.

பொது வாழ்வில் தமிழக மக்களுக்கு மேடை நாடகம், சினிமா மூலம் சிறந்த சீர்த்திருத்த கருத்துகளை சொன்ன கலைவாணர் மறைந்த போது 

அவரது வயது 48 மட்டுமே, அவரது இளவல் சின்னக்கலைவாணர் விவேக் 59 வயதில் மரணத்தை தழுவியுள்ளார்.

சின்னக்கலைவாணர் விவேக்

அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதன் காரணமாகவே உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவரது மரணத்திற்கான மூன்று காரணங்களை மருத்துவர்கள் விளக்க மளித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் சிறந்த நடிகராகவும், ஒரு சிறந்த சமூக சேவையாளராகவும் இருந்து வந்த நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக, 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த நாளே, விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவரது மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன், விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் அவரது மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வருகிறார்.

மேலும், தினமும் சைக்கிளிங், யோகா மூச்சு பயிற்சி, நீச்சல், நடைபயிற்சி 3 மாதங்களுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு உடலை கவனமாக பார்த்துக் கொண்ட விவேக்கிற்கு  

தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் அவரது மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை

ரத்த குழாயில் திடீரென்று 100 சதவீத அடைப்பு ஏற்பட்டது எப்படி? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனெனில், இதற்கு முக்கிய காரணம், சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் மற்றும் ஆரம்பத்தில் மருத்துவர்கள் அளித்த முரண்பட்ட தகவல் தான் என்று கூறப்படுகிறத்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், விவேக்கின் உடல் நிலை குறித்து அதிகார பூர்வ தகவலை வெளியிட்ட நிகில் முருகன், விவேக்கிற்கு மயக்கம் ஏற்பட்டு 

அவரது மகள் மருத்துவமனை அழைத்துச் சென்றதாகவும், எம்.ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப் படுவதாகவும், விவேக் சுய நினைவுடன் நலமாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.

ஆனால், விவேக் காலை 11 மணிக்கு சுய நினைவின்றி சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவருக்கு 100 சதவீத மாரடைப்பு ஏற்பட்டதால், 

சுய நினைவின்றி சிகிச்சை

ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டு, அடைப்பு நீக்கப் பட்டதாகவும், இதயதுடிப்பு சீராக இருக்க வேண்டும் என்பதற்காக எக்மோ சிகிச்சை மூலம் 

செயற்கை சுவாசம் அளிக்கப் படுவதாகவும் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இரவில் செய்தியாளரை சந்தித்த மருத்துவர்கள் விவேக்கின் உடல் நிலை மோசமாக இருப்பதால் 24 மணி நேரம் கழித்து தான் எதையும் கூற முடியும் என்று தெரிவித்தனர்.

ஆனால் அடுத்த 10 மணி நேரத்திற் குள்ளாகவே அதிகாலையில் விவேக் உயிரிழந்து விட்டதாக அறிவிப்பு வந்தது.

இந்நிலையில், விவேக்கிற்கு ஏற்பட்டுள்ள மாரடைப்பை சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று குறிப்பிடுகின்றனர். 

அதாவது முதல் 3 நிலைகளை கடந்த அதிதீவிர நிலையாக கருதப்படும் இத்தகைய மாரடைப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் எந்த ஒரு வலியையும் கொடுக்காமல் 

சைலண்ட் ஹார்ட் அட்டாக்
சட்டென்று இருதயத்துக்கு செல்லும் ரத்தத்தை உறைய வைத்து கிட்னி, மூளை என அடுத்தடுத்த பாகங்களையும் செயல் இழக்க வைத்து 

கோமா நிலைக்கு கொண்டு சென்று விபரீத உயிரிழப்பை ஏற்படுத்தி விடும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற சைலண்ட் மாரடைப்பு மரணங்கள் தூக்கத்திலேயே பலருக்கு நிகழ்ந்துள்ளதாகவும் விவேக் ஒரு பிரபலம் என்பதால் வெளி உலகிற்கு தெரிகிறது என்று கூறுகின்றனர்.

இந்த வகையான மாரடைப்பு ஏற்பட்டால் அதிக பட்சம் ஒரு மணி நேரத்திற்குள் அவரை மீட்டுக் கொண்டு வர என்னென்ன முதல் உதவிகள் செய்ய வேண்டுமோ? 

அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் விவேக் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.  

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings