காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால் செய்ய வேண்டியது !

0

காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். 

காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால் செய்ய வேண்டியது !
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. 

ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. 
ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. 
இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும்.

அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும். ஆகவே தான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். 

பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
சூப்பரான முட்டை பணியார குருமா செய்வது எப்படி?
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings