2 நாட்களுக்கு மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் !

0

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. நூறு ஆண்டுகளுக்கும் மேலான வானிலை மாற்றம் குறித்த பதிவுகளை சென்னை வானிலை ஆய்வு மையம் ஆவணப் படுத்தியுள்ளது. 

2 நாட்களுக்கு மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் !

அந்த பதிவுகளை கொண்டு பார்க்கையில், 2021 ஜனவரி முதல் வாரத்தில் பெய்துள்ள மழை மிகவும் அரிதாக நடந்த நிகழ்வாக கருதப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஜனவரி மாதம் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். 

தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை காலமும் இருக்கும். 

ஆனால் இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை ஜனவரியில் தொடர்கிறது என்பதை தான் இந்த அதீத மழைப் பொழிவு உணர்த்தியது.

அதன் பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த ஐந்து நாட்கள் தமிழகத்தில் அனல் காற்று வீசும்.

ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

2 நாட்களுக்கு மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் !

இதனை அடுத்து தமிழகத்தில் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், 

கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதனால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings