காலையில் எழுந்ததும் மலம் போகா விட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள்.
இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை.
மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை வரலாம். இரு முறை வரலாம். எதுவும் தப்பில்லை.
வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது. மலம் இறுகிப் போவது. மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு,
மருத்துவ மொழியில் சொன்னால் ஒருவருக்கு வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் போவது ‘மலச்சிக்கல்'.
இது நம்மில் பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. மலச்சிக்கல் பிரச்சனை ஆரோக்கியமற்ற குடல் இயக்கங்களால் ஏற்படுகின்றது.
அதற்கான தீர்வினை குறித்து தொகுபில் நாம் பார்ப்போம்.
வெளியில் அல்லது அலுவலகத்தில் செல்லும் போது மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறதா?அதை பற்றியே நாம் பார்க்கப் போகிறோம்.
முதலில் நாம் உடம்புக்குத் தேவையான அளவு உணவை எடுத்துக் கொள்வது நாம் மலச்சிக்கலில் இருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கும்.
உணவை உட்கொள்ளும் போது பெருங்குடல் வழியாக இயக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டு குடல் சுருங்கி விரிவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும்.
மலச்சிக்கலில் இருந்து விடுபட முதலில் போதுமான அளவு உணவை உட் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை விட என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது தான் முதலில் முக்கியம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளும் போது மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமாகும்.
நார்ச்சத்தை போலவே கொழுப்பு மொத்தமாக நம் உடலில் சேருகிறது. நம் உடலில் விட்டமின் ஏ உறுப்புகள் துணை புரிகின்றன. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையி லிருந்து உங்களை பாதுகாக்கின்றது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் தண்ணீர் நிரம்பிய உணவுகளை எடுத்துக் கொண்டால் அது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும்.
அதாவது அண்ணாச்சி பழம் போன்ற உணவுகளை நாம் உட்கொள்ளும் போது நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இதனால் உடல் சீரான இயக்கத்திற்கு உதவியாக இருக்கும்.
உங்களுக்கு மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் உடனடியாக கழிவறைக்கு சென்று விடுங்கள். மலத்தை அடக்குவது மூலநோய் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
ஒரு வேளை நீங்கள் அலுவலகத்தில் பணி நிமித்தமாக இருந்தால் உங்களது மேலதிகாரியிடம் அல்லது நண்பர்களிடம் கூறி விட்டு கழிவறைக்கு சென்று விடுங்கள்.
மலம் கழிக்கும் நடைமுறையை குறைந்தது ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கான குறைவான நேரத்திற்கு மட்டுமே எடுக்க வேண்டும்.
Thanks for Your Comments