திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கும்,
67 வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன்.
தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர் நடிகர் ரஜினி காந்த். அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டும் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய திரைத்துறையில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கும், நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட உள்ளது.
ரஜினி, தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது பெறுவது இரு நடிகர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தனக்கு நெருக்கமானவர்களிடம், ரஜினியுடன் சேர்ந்து ஒரே நாளில் விருது பெறுவது தான் பெரிய விருது என்று புளங்காங்கிதம் அடைந்து வருகிறாராம் தனுஷ்.
Thanks for Your Comments