வலங்கைமான் சுன்னத் ஜாமாத் பள்ளிவாசலில் ரமலானின் சிறப்பு தொழுகை நிறைவேற்றப்பட்டது.
ரமலான் மாத தராவீஹ் சிறப்பு தொழுகையை இரவு 10 மணிக்குள் முடித்துக் கொள்ள தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார்.
ரமலான் மாதங்களில் இஸ்லாமியர்கள் இரவு நேர தராவீஹ் தொழுகையை மேற்கொள்வது வழக்கம்.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை மேற்கொள்ளப் படவில்லை.
இந்த ஆண்டும் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை நடத்த அனுமதி வழங்க கோரி,
தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் கோரிக்கை வைத்தார்.
அதன் பின்னர் தராவீஹ் சிறப்பு தொழுகைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து வலங்கைமான் சுன்னத் ஜாமாத் பள்ளிவாசலில் ரமலானின் முதல் நாளாகிய இன்று ( 13/04/2021 ) தமிழக அரசு கூறிய விதிமுறையை பின்பற்றி, சரியான
சமூக இடைவெளியுடன் தங்களுடைய சிறப்பு தொழுகையான ரமலான் கடமையை நிறைவேற்றினார்கள் .
Thanks for Your Comments