தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் 16-வது தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.
வேட்பாளர்களுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா? இந்த கனியை சாப்பிடுங்கள் !
இதனால், வாக்காளர்கள் அச்சமின்றி முழு சுதந்திரத்துடன் வாக்களிக்க முடியும். அரசியல் கட்சியால் நியமிக்கப்படும் தேர்தல் பணியாளர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையினை அணிந்து கொள்ள வேண்டும்.
வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அலுவல் சாரா அடையாள சீட்டில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் வேட்பாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறுதல் கூடாது.
தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் மதுபானம் பயன்படுத்துதல் கூடாது.
தெரு நாய்களை அரவணைக்கும் மதுரை பெண் - வீதி வீதியாக சென்று உணவு !
வாக்குச்சாவடி மையத்திற்கு அருகில் அரசியல் கட்சிகளால் அமைக்கப்படுகிற வாக்காளர் உதவி முகாமில் தேவையற்ற வகையில் நெரிசல் உருவாகாத வகையில் செயல்பட வேண்டும்.
வேட்பாளர் முகாம்கள் எளிமையாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். கட்சியின் கொடி, சின்னங்கள், போஸ்டர்கள் மற்றும் இதர விளம்பரங்களை காட்சிப் படுத்தக்கூடாது. மேலும் முகாம்களில் உணவு வினியோகம் கூடாது.
இதயத் துடிப்பை சீராக்கி, ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் ஏலக்காய் !
தேர்தல் நடைபெறும் நாளில் வாகனம் பயன்படுத்துதல் குறித்த உத்தரவுகளை வேட்பாளர்கள் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments