தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகர்கள் நடிககைகள் வலம் வந்த உள்ளனர். இதற்கு காரணம் அவர்களது திறமை என்றாலும்,
இந்த செயலியின் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரைகளில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்கள் பலர்.
அந்த வகையில் சொல்ல வேண்டுமென்றால் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் வரும் சக்தி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
பிரபல தொடரான சத்யா தொடரில் வரும் ஆயிஷா போன்றோர் இந்த செயலின் மூலம் பிரபலமாகி தான் சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் நடித்து வருகின்றனர்.
கேப்ரியெல்லா நடாலி சார்ல்டன் என்பவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய முன்னாள் குழந்தை நட்சத்திரம் ஆவார்.
இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஒரு நடன நிகழ்ச்சியில் முதல் முறையாக தோன்றினார். ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் வெற்றியாளராக ஆனார்.
இவர் பள்ளி படிப்பை புனித ஜான்ஸ் மெய்ஸ்டின் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரி படிப்பை சென்னை நேஷனல் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.
குழந்தைப் பருவம் முதலே நடனத்தில் ஆர்வம் மிகுந்தவர். இவர் தற்போது படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தாலும் இவர் முதன் முதலில் திரையில் அறிமுகமானது என்னவோ
அந்த நிகழ்ச்சியில் இவரது நடிப்பு பலரால் பாரட்டபட்டாலும் இவருக்கு மக்கள் மற்றும் சினிமா துறையில் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இவ்வாறன நிலையில் தான் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் அந்த பெண் கதறலை அப்படியே தத்ரூபமாக நடித்து மக்கள் மத்தியில் வேற லெவல் பேமசானர்.
இதை தொடர்ந்து இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.
நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா மற்றும் கபாலி, காஞ்சனா 3 போன்ற படங்கள் மற்றும் பல குறும்படங்களில் நடித்துள்ள இவர் .
இப்படி ஒரு நிலையில் தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது செத்தும் ஆயிரம் பொன் எனும் திரைபடத்தில் நடித்து வரும் கேப்ரில்லா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.
Thanks for Your Comments