தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கட்டுப்பாடுகள் தீவிரபடுத்தப் பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இருந்த போதிலும் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் மேலும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது
இது குறித்து வெளியிட்ட அறிவிப்பின் படி,
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை.
கொரோனா எதிரொலியாக திரையரங்குகள் மூட உத்தரவிடப் பட்டுள்ளது.
நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ் !
உணவு விடுதிகள் மற்றும் டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்.
உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதியில்லை.
தகவல் தொழில்நுட்ப நிறுவன நிறுவனங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய உத்தரவிடப் பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் மூடல் – அரசு அறிவிப்பு!!
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !
கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்கு, கூட்ட அரங்குகளுக்கு அனுமதி இல்லை.
கோவில் குடமுழுக்குகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. கோவில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கிளப், விளையாட்டு பயிற்சி மையங்களுக்கு அனுமதி இல்லை.
மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர கடைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.
திருமணம் மற்றும் அதை சார்ந்த கூட்டங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும், இறுதிச்சடங்கு மற்றும் அதன் கூட்டங்களில் 25 நபர்களுக்கு மிகாமலும் பங்கேற்கலாம்.
ஃபோம் கான்கிரீட் கற்கள் ( செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட்) !
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 4 மணி முதல் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள மற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் வழக்கம் போல் அமலில் இருக்கும்.
Thanks for Your Comments