மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு மார்பில் தாங்க முடியாத வலி ஏற்படும். சில நேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்றதொரு உணர்வு மேலோங்கும்.
மாரடைப்புக்கான சாத்தியங்கள் 100% உள்ள ஒருவருக்கு இந்த அறிகுறிகள் தென்படலாம்: நடக்கும் போதும், படிக்கட்டுகளில் நடக்கும் போதும், சிலருக்கு உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் போதும் வலி ஏற்படும்.
இது மட்டுமன்றி அதிகமான உணவு உட்கொண்ட பின்னர் நடக்கும்போதும்கூட வலி ஏற்படும். இதை `அஞ்சைனா (Angina)' என்போம்.
இந்த அஞ்சைனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர்,
சம்பந்தப் பட்டவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் கண்டறிந்து, ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பைக் கண்டறிந்து, அதற்கேற்ற மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்.
அதை உட்கொள்ளும் போது மாரடைப்பி லிருந்து நிவாரணம் பெற முடியும். சிலருக்கு சைலன்ட்டாக மாரடைப்பு வரலாம். இவர்களுக்கு வலி ஏற்படுவதே தெரியாது.
சர்வதேச இருதய அமைப்பு, ஆண்டு தோறும் செப்டம்பர் 29 ஆம் தேதியை, உலக இருதய தினமாக அனுசரிக்கிறது. இந்தத் தினத்தின் போது,
இதயம் தொடர்பான நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ அறிவுரைகள் வழங்கப் படுகின்றன.
இந்த இருதய தினத்தன்று, பலர் இறப்பதற்கு காரணமாக இருக்கும் மாரடைப்பு நோயின் ஆரம்பக் கால அறிகுறிகளைப் பற்றி அறிவோம்.
மேலும், அத்தகைய அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் பற்றி இங்கு பார்ப்போம்.
உங்கள் மார்பு பகுதியில் அடிக்கடி வலி உண்டானால், இந்த நோய் பாதிப்பு இருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
மாரடைப்பின் அறிகுறிகள்:
கீழே குறிப்பிடப் பட்டுள்ளவை மாரடைப்பின் ஆரம்பக் கால அறிகுறிகளாகும்.
மாரடைப்பின் மிக முக்கியமான அறிகுறி நெஞ்சு வலி, நெஞ்சு இறுக்கப் படுவது போன்றும், அழுத்தப் படுவது போன்றும் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
வாந்தி, வியர்வை மற்றும் மூச்சு விடுவதில் சிக்கல் போன்றவை மாரடைப்பின் மற்ற அறிகுறிகள்.
நெஞ்சு வலி ஏற்படுதல், அத்தோடு இடது தோள்பட்டை, வலது தோள்பட்டை, கழுத்து, கை, வயிறு என வலி பரவுவது மாரடைப்பு தீவிரமாவதற்கான அறிகுறிகள்
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப் படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன,
பெண்களை பொறுத்த வரையில், உடல் அசதி, தூக்கமின்மை, மூச்சுத் திணறல் போன்றவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன.
இதைத் தவிர, தானமாக இதயத்தைப் பெறுபவர்களுக்கும் கூட மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.
சில நேரங்களில், மாரடைப்பானது எவ்வித அறிகுறியும் இல்லாமல், முதல் தாக்கத்திலேயே உயிரைக் குடிக்கலாம். இதற்கு அமைதியான மாரடைப்பு என்று பெயர்.
சிகிச்சை முறைகள்:
தினமும் உடற்பயிற்சி / நடை பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். உடலுக்கு ஆரோக்கியமான, இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவு முறைகளை உட்கொள்ள வேண்டும்.
இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தங்கள் உடல் நலத்தின் மேல் அக்கறை உள்ள அனைவரும் 6 மாதத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
அப்போது தான், நம்மை அறியாமலே நம்மை பாதித்துள்ள நோய்களை அறிந்து அவற்றிற்கு முறையான சிகிச்சைப் பெற முடியும்.
Thanks for Your Comments