தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது.
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. பின்னர் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.
அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
வைரம் பற்றிய நாம் அறியா விஷயங்கள் !
இந்நிலையில் ஆவடி மற்றும் அவினாசி பகுதிகளில் எந்தச் சின்னத்தில் பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலையில் விளக்கு எரிவதாக வாக்காளர்கள் புகார் அளித்துள்ளனர்.
இன்று காலையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தங்கள் வரக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், அவினாசி தொகுதிக்கு உள்பட்ட கனியாம்பூன்டியில் 312வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்தில் விளக்கு எரிவதாக வாக்காளர்கள் புகார் அளித்துள்ளனர்.
அதே போல சென்னையை அடுத்துள்ள ஆவடி விவேகானந்தா பள்ளியில் உள்ள 123வது வாக்குச் சாவடியில் திமுகவுக்கு வாக்களித்தால்
விவிபேட் இயந்திரத்தில் இரட்டை இலை சின்னம் காட்டுவதாக வாக்காளர்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் சிங்காநல்லூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Thanks for Your Comments