19 ஆண்டாக நடித்து வரும் த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை யார்?

2 minute read
0

தமிழ் சினிமாவில் 16 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா (trisha) வாழ்க்கையில் காதலும் சரி திருமணமும் சரி எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

19 ஆண்டாக நடித்து வரும் த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை யார்?
ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்து வந்த திரிஷாவுக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ஹரி இயக்கத்தில் வெளியான சாமி திரைப்படம் தான். 

இதனை தொடர்ந்து வெளியான கில்லி திரைப்படம் த்ரிஷாவை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த த்ரிஷா மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார். 

குண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா?

கிளாசிக், கிளாமர் என்ற இரண்டு பக்கங்களிலும் நாணயமாக சுழன்று கொண்டிருந்தார் திரிஷா.

சிம்பு ,ராணா டகுபதி போன்ற பல்வேறு நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினாலும் பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 

19 ஆண்டாக நடித்து வரும் த்ரிஷா

அது போக சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது நெருங்கிய நபர் சிட்னி சேடேன் என்ற ஆடை வடிவமைப்பாளரை காதலித்து வருவதாக பல கிசுக்குக்கள் வெளியாகின. 

ஆனால் த்ரிஷா, அவர் தனது நெருங்கிய நண்பர் தான் அவரை காதலிக்க வில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

கர்ப்பப்பையில் கட்டிகள் பரிசோதித்துக் கொள்வதே சிறந்தது !

இந்நிலையில் 19 ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் த்ரிஷா கடந்த 4ம் தேதி தன் 38 வது பிறந்த நாளை கொண்டாடினார். 

அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலை தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

எத்தனையோ பேர் வாழ்த்தியபோதிலும் த்ரிஷாவின் நெருங்கிய தோழியான நடிகையும், தயாரிப்பாளருமான சார்மியின் வாழ்த்து தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை யார்?

த்ரிஷா சிங்கிளாக கொண்டாடும் கடைசி பிறந்த நாள் இது தான் என சார்மி தெரிவித்துள்ளார்.

திருமணம் நிச்சயமாகப் போய் தானே சார்மி இப்படி வாழ்த்தி யிருக்கிறார். இந்த த்ரிஷா ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மாப்பிள்ளை யாராக இருக்கும் என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

முன்னதாக த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டது. அதன் பிறகு ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

கள்ள உறவு ஏன்… எப்படி… உருவாகிறது..? ரூசீகரமான தகவல்கள் !

முன்னதாக ராணாவை பிரிந்த பிறகு த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த திருமணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. 

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று வருண் மணியன் நிபந்தனை விதித்தது த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்தே அவர் திருமணத்தை நிறுத்தினார்.

சீயக்காயை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் !

கடைசி மூச்சு இருக்கும் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று த்ரிஷா ஆசைப்படுகிறார். த்ரிஷா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 

19 ஆண்டாக நடித்து வரும் த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை யார்?

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. திருமணம் குறித்து த்ரிஷா எதுவும் சொல்லாத வருத்தம் இருந்தாலும் அவரை விரைவில் மணமகளாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரிஷாவுக்கு அக்கட தேசத்தில் ஒரு தொழிலதிபர் மாப்பிள்ளை சிக்கி விட்டதாகவும், விரைவில் இருவருக்குமான திருமண செய்தி வெளிவரும் எனவும் சொல்லாமல் சொல்லியுள்ளார் சார்மி. 

இதே மாதிரி திரிஷாவை பற்றி ஏகப்பட்ட திருமண வதந்திகள் வருவதால் உண்மையான அறிவிப்பு வரும் வரை நாங்கள் நம்பமாட்டோம் என்கிறார்கள் ரசிகர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings