இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38. 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ்.
பின்னர் 2017ஆம் ஆண்டு ‘மரகத நாணயம்’ படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். இந்தப் பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிப்பு தவிர்த்து ‘தெறி’, ‘காக்கிசட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு பாடல்களையும் அருண்ராஜா பாடியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு ‘கனா’ படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.
குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆர்ட்டிக்கிள் 15 என்ற படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி இயக்கி வருகிறார் அருண்ராஜா காமராஜ்.
இந்நிலையில் அருண் ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார் சிந்துஜா.
அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். அருண்ராஜா காமராஜும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மனைவியின் உடலை தொட்டுக்கூட பார்க்க முடியாமல் அவர் கதறியது அங்கு கூடியிருந்த சொந்த பந்தங்களையும் கதற செய்தது.
முழு கவச உடையுடனே அருண்ராஜா காமராஜ் தனது மனைவியின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்து முடித்தார்.
உயிரிழந்த இயக்குநர் அருண்ராஜாவின் மனைவியின் உடலுக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கண்ணீர் மல்க நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அருண்ராஜா காமராஜை கவச உடையில் பார்த்த சிவகார்த்திகேயனும் உதயநிதி ஸ்டாலினும் கண்கள் கலங்கினர்.
அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது,
நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன்.
அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண் ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.
Thanks for Your Comments