தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு, stationary பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவரும் ரோட்டை Cross செய்து கொண்டிருந்தார்.
மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் திடீரென்று break போட்டு நின்றது.
ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண். அந்த பெண் கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டி விட்டு, வேகமாக சென்று விட்டார்.
என்ன தான் அந்தப் பெரியவர் மீது தவறு இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை.
ரோஹைப்னால் மாத்திரை பெண்களே உஷார்
முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி சென்றார். இன்று அதே நேரத்தில், அங்கு அவரிடம் பலாச்சுளைகளை வாங்கிக் கொண்டிருந்தேன்.
எனக்கு சுளைகளை கவரில் வைத்து கொடுக்கும் போது கூட, தெருவையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார்,
பூண்டு மீன் குழம்பு செய்முறை !
யாரையோ எதிர் பார்த்துக் கொண்டு. அதே பெண் தூரத்தில் ஸ்கூட்டரில் வருவதை பார்த்ததும், ஒரு நிமிஷம் சார் என்று என்னிடம் கூறி விட்டு வந்து கொண்டிருந்த பெண்ணை நிறுத்தச் சொல்லி கையசைத்தார்.
அந்த இளம் பெண்ணும் முகத்தில் சற்று கலவரத்தோடு, நேற்று திட்டியதற்கு சண்டை போடப் போகிறாரே? என்று வண்டியை நிறுத்திவிட்டு, என்ன? என்று கோபமாக கேட்டாள்.
நான் கூட நேற்று நடந்ததற்கு ஒரு சத்தம் போடப் போகிறார் என்று தான் நினைத்தேன். ஆனால் நடந்தது மனதை நெகிழ வைத்தது.
நெத்திலி கிரிஸ்பி வறுவல் செய்முறை !
அந்த இளம் பெண்ணுக்கு பேச்சே வரவில்லை. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு "ஐயா இந்த போனை தொலைத்தில் இருந்து நிம்மதியே இல்லை.
நான் பேங்கில் பணிபுரிபவள். முக்கியமான நெம்பர்ஸ் எல்லாம் இதில் தான் இருக்கிறது. மிக்க நன்றி" என்று கூறிவிட்டு கண் கலங்கினார்.
அர்ட்டிகேரியா என்கிற காணாக்கடி !
நேற்று அவ்வளவு அவமரியாதையாக பேசி இருக்க கூடாது. Work tension. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி விட்டேன்" என்று கைகூப்பினாள்.
அட விடு தாயி. எல்லாருக்கும் கோபம் வர்றது தான். இதை போய் பெரிசு படுத்திக் கொண்டு. ஜாக்கிரதையாக போ தாயி" என்று அன்போடு அனுப்பி வைத்தார்.
வயசாயி பக்குவம் வந்தா எல்லாம் சரியாயிடும். எனக்கு பேத்தி வயசு. என் பேத்தியா இருந்தா சண்டை போடுவேனா?
பெண்களின் முலைகளை வெட்டி வீசுங்கள் - கொடூர தண்டனை தெரியுமா?
நல்லா இருக்கட்டும் சார். நம்மை சுத்தி எல்லோரும் மனுஷங்க தான் சார். இருக்கிற வரைக்கும் அன்பா பாசமா இருந்துட்டு போவேமே." என்றார்.
என்னால் பேசவே முடியவில்லை. அசந்து விட்டேன். நம்மை சுற்றி எத்தனை நடமாடும் ஞானகுருக்கள்
Thanks for Your Comments