நம்மை கதிகலங்க வைக்கும் கொடுமையான பண்டைய கால அடிமை முறை !

0

பண்டைய காலத்தை விடவும், மாடர்ன் காலக்கட்டத்தில் தான் அதிகளவிலான அடிமை முறை பின்பற்றப்படுகிறது என கூறப்படுகிறது. 

நம்மை கதிகலங்க வைக்கும் கொடுமையான பண்டைய கால அடிமை முறை !
மாடர்ன் காலத்தில் உலகளவில் 45 மில்லியன் அடிமைகள் இருந்ததாக அறியப்படுகிறது. மூடர் கூடம் என்ற படத்தில் வரும் மாம்பழம் வசனத்தை போல தான் பண்டையக் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். 

கொஞ்சம் வலுவாக உள்ளவன் ஓரிடத்தை ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டு, பிறகு அங்கே வந்தவனை இது என்னிடம், 

இங்கே நீ இருக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை செய்ய வேண்டும், இல்லையேல் நீ இங்கு உயிர்வாழ முடியாது என்பது போல தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

பிறகு அரசாட்சி, அடிமைத்தனம் என்பது மெல்ல, மெல்ல அதிகரித்து உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற கோட்பாடுகள் வகுக்கப்பட்டு வலுவிருப்பவன் வல்லவனாகவும், வலிவிழந்து காணப்பட்டவன் அடிமையாகவும் வாழ்ந்துள்ளனர். 

உலகளவில் காணும் போது மற்றப் பகுதிகளை காட்டிலும், ரோமானியர்கள் மத்தியில் தான் இந்த அடிமைத்தனம் மேலோங்கி காணப்பட்டுள்ளது.

அடிமைத்தனம் என்பது மனிதர்களிடம் மட்டும் இல்லை. பூச்சிகளான எறும்புகள், பிற எறும்புகளை அடிமையாக நடத்தும் குணம் கொண்டிருக்கிறதாம்.

நோன்பு காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்கும் உணவுகள் !

எப்படி? யார், யார்? எந்தெந்த வகையில் அடிமைகளானார்கள், அவர்கள் விடுதலை பெற எத்தனை கடினமான விஷயங்களை கடந்து வந்தனர் என்பது குறித்து இங்கே காணலாம்...

அடிமை முறையின் தொடக்கம் :

அடிமை முறையின் தொடக்கம்

அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே இருந்தது. அடிமையால் எந்த பயனும் இல்லை என்றால் அவர் கொல்லப்படுவார். அல்லது ஆள் இல்லாத தீவில் கொண்டு விடப்படுவார். 

பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதும் அடிமை முறையின் ஒரு அங்கமாக இருந்தது. தொன்மையான நாகரிக நாடுகள் என வர்ணிக்கப்படும்.

அடிமைகள் எண்ணிக்கை!

அடிமைகள் எண்ணிக்கை!

பண்டையக் காலத்து ரோமாபுரியில் தான் அதிகப்படியான அடிமைகள் இருந்ததாக அறியப்படுகிறது. 

முதலாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த நபர்களில் 90% பேர் ரோமாபுரியில் இருந்து அடிமைகளாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்ற தகவலும் அறியப்படுகிறது.

பண்டையக் காலத்தின் முடிவிற்கு பின் அடிமைகளை விடுவித்த பிறகு, அடிமைகளின் எண்ணிக்கை விகிதம் எடுத்து பார்த்த போது 

இருபது இலட்சம் பேரில் நால்வரில் மூவர் என்ற விகிதத்தில் அடிமையாக இருந்து வந்தது அறிய வந்தது.

பண்டைய ரோமாபுரி !

பண்டைய ரோமாபுரி !

பண்டையக் காலத்து ரோமபுரியில் சதுர்னாலியா (Saturnalia) என்ற விழா கொண்டாடி வந்துள்ளனர். 

இந்த ஒரு நாள் மட்டும் எஜமான்கள் அடிமைகளாகவும், அடிமைகள் எஜமாங்களாகவும் தங்கள் பாத்திரத்தை மாற்றிக் கொள்வார்களாம்.

இன்று!

மாடர்ன் உலகில் அடிமைத்தனம்

இன்றைய மாடர்ன் உலகில் அடிமைத்தனம் இல்லை என நாம் கருதுகிறோம். 

ஆனால், இன்றும் ஆட்கடத்தல் முறையில், உலகின் பல பகுதிகளில் மனிதர்களை கடத்தி அடிமைகளாக விற்று வருகிறார்கள். 

நம் உடலில் நீர்சத்து குறைபாடு என்றால் என்ன?

இது பலருக்கும் தெரிவதில்லை. இன்றைய கணக்கில் உலகில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அடிமைகள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்பார்டகஸ்!

ஸ்பார்டகஸ்

ரோம் அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமை கலகங்கள் நிகழ்ந்தன. 

ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர் வீரர்கள்; வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருப்பவர்கள். 

அக்கலகங்களில் புகழ்பெற்றது கிமு 73-71 ஆம் ஆண்டில் நடந்த ஸ்பார்டகஸ் எழுச்சி. பண்டையக் காலத்து ரோமாபுரியில் அடிமைகள் நிறைய பேர் இருந்தனர். 

ஆற்றில் மிதக்கும் சடலங்களால் பீதியில் குடியிருப்புவாசிகள் !

இவர்களில் ஸ்பார்டகஸ் என்ற அடிமை மிகவும் பிரபலமானவன்.  ஸ்பார்டகஸ் "பிறப்பால் ஒரு திராசியன்" என்றும், அவர் ஒரு காலத்தில் ரோமர்களிடம் ஒரு படை  சிப்பாயாக பணியாற்றியிருந்தார், 

ஆனால் பின்னர் ஒரு கைதியாக இருந்து கிளாடியேட்டர் க்கு விற்கப்பட்டார். ரோம் நாட்டின் அடிமைகளில் எல்லா காலத்திலும் இவர் தான் சிறந்தவராக இருந்தார். 

ரோமின் கிளாடியேட்டர்பயிற்சி முகாமில் இருந்த 73 கி.பி-யில் இவர் தப்பித்துள்ளார்.

78 பேர்!

படை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினர்.

இவர் மட்டுமின்றி, இவருடன் 78 பேரை சேர்த்து தப்பித்துள்ளார். ரோம் இராணுவத்தை ஸ்பார்டகஸ் மற்றும் அவனது படை இரண்டு ஆண்டுகள் எதிர்த்து வந்தனர். 

இவர்கள் இறந்த உடல்களை ஆயுதம் ஏந்த வைத்து பெரிய படை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினர். இதனால், தொலைவில் இருந்து கண்டால் பெரும் படை திரண்டிருப்பது போன்ற பிம்பம் தெரியும்.

மரணம்!

ஸ்பார்டகஸ் இறந்த போதிலும்

கடைசியாக, ரோம இராணுவத்தால் ஸ்பார்டகஸ் கொலை செய்யப்பட்டார். ஸ்பார்டகஸ் இறந்த போதிலும், அவனது பெயர் என்றும் இறக்கவில்லை. 

கொரோனாவால் என்ன பாதிப்பு வரும்... என் சொந்த அனுபவம் !

இன்றளவும், ரோம வரலாற்றில் அழியாத பெயர் கொண்டிருப்பவன் ஸ்பார்டகஸ். இன்றும் பல புத்தகம், டிவி சீரியஸ், படங்கள் என ஸ்பார்டகஸ் பெயரை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 

ஆனால்  ஸ்பார்ட்டாக்ஸ்சின்  உடல் ஒரு போதும் கண்டுபிடிக்கப் படவில்லை.

6000 பேர்!

ஸ்பார்டகஸ் இராணுவம்

ஸ்பார்டகஸ் மற்றும் அவனது 78 பேர் கொண்ட படையை அழிக்க ரோம இராணுவம் 6,000 அடிமைகளை திரட்டிக் கொண்டு பெரும் படையாக சென்றது என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

ரோமாபுரியில் அடிமைத்தனம்!

ரோமாபுரியில் அடிமைத்தனம்!

உலகில் வரலாற்றில் ரோமர்களிடத்தில் தான் அடிமைகள் கொண்டிருப்பது பெருமளவு இருந்ததாக தெரிய வருகிறது. 

அடிமைகள் வைத்திருப்பது என்பது செல்வந்தர்களின் கௌரவமாக மட்டும் அங்கே காணப்படவில்லை. 

ஏழைகள் கூட ஒன்று அல்லது இரண்டு அடிமைகளை வைத்திருந்த நிலை ரோமாபுரியில் காணப்பட்டுள்ளது.

செல்வந்தர்கள்!

செல்வந்தர்கள்

ஏழைகளிடமே ஒன்றல்லது, இரண்டு அடிமைகள் எனில், பெரும் செல்வந்தர்களிடம் எத்தனை அடிமைகள் இருந்திருப்பார்கள் என எண்ணி பாருங்கள். 

நீரோவிடம் (Nero) நானூறுக்கும் பெறப்பட்ட அடிமைகள் இருந்ததாக அறியப்படுகிறது. 

கும்பகோணம் அம்மா உணவகத்தில் உணவு வழங்க ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ ! 

ரோமாபுரியை சேர்ந்த கயஸ் கேசிலிஸ் இசிடரஸ் இறந்த போது மட்டும், அவரிடம் நான்காயிரத்து நூற்று அறுபத்தி ஆறு அடிமைகள் இருந்ததாக அறியப்படுகிறது.

அடிமை தேவை?

அடிமை தேவை?

அடிமைகள் கொண்டிருக்க ரோமானியர்கள் ஏராளமான காரணங்கள் கொண்டிருந்தார்கள். 

போக்குவரத்து, சுரங்கம் தோண்டுவது, வீட்டு வேலைகள் செய்வது, நிலம் சுத்தம் செய்ய, விவசாயம் செய்ய, கால்நடைகளை பார்த்துக் கொள்ள, பராமரிக்க என அடிமைகளை பல காரணங்களுக்காக ரோமானியர்கள் கொண்டிருந்தனர். 

இவர்கள் அடிமைகளை ஆரோக்கியமாக பராமரிக்கவில்லை. இவர்களிடம் இருந்த அடிமைகள் மிகவும் நோய் வாய்ப்பட்டு, உடல்நலம் குன்றிய நிலையில் தான் இருந்துள்ளனர்.

அடிமைகள் கொள்முதல்!

அடிமைகள் கொள்முதல்!

அடிமைகளை பல வகையில் இவர்கள் கொள்முதல் செய்துள்ளனர். போரில் தோற்றவர்கள், கைதானவர்கள், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் பிடிப்பட்டவர்கள், 

வணிகம் செய்ய வந்து வாங்கப்பட்டவர்கள் மற்றும் காலம், காலமாக அடிமைகளாக இருந்து வந்தவர்கள். இது போல பல நிலைகளில் அடிமைகளை கொள்முதல் செய்துள்ளனர் ரோமானியர்கள்.

10,000!

பத்தாயிரம் அடிமை

ஒரு தருவாயில், ஒரே நாளில் பத்தாயிரம் அடிமைகளை வர்த்தக ரீதியாக இத்தாலிக்கு அனுப்பியதாக வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. 

மதியம் குட்டி தூக்கம் தூங்குவது நல்லதா?

பெரும்பாலும், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் பிடிபடும் நபர்களை வர்த்தகத்தில் ஈடுபடும் போது அடிமைகளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

பொதி சுமக்க, கப்பல் ஓட்ட, கட்டுமான வேலைகளில் ஈடுபடுத்த இவர்களை அடிமைகளாக பயனடுத்தியுள்ளனர்.

விடுதலை!

விடுதலை

ரோமானியா சமூகத்தில் ஒரு அடிமையை விடுதலை செய்யும் உரிமை அந்த அடிமையின் உரிமையாளருக்கு இருந்தது. இதை மனுமிஷன் (manumission) என கூறியுள்ளனர். 

இது பல வகையில் நிறைவேற்றியுள்ளனர். ஒரு அடிமையின் நேர்மை, வேலையை கண்டு மனம் மகிழ்ந்து விடுதலை செய்தல், அல்லது 

அந்த அடிமை மூலமாக பெற்ற அதிக லாபம் காரணமாக விடுதலை செய்வது, அல்லது போதுமான அடிமைகள் இருக்கும் போது நீண்ட காலம் அடிமை சேவகம் செய்தவர்களை விடுதலை செய்வது.

கொடுமை செய்யும் வழக்கம்

கொடுமை செய்யும் வழக்கம்

பெரும்பாலான ரோமாபுரி பகுதிகளில் அடிமைகளை கொடுமை செய்யும் வழக்கம் இருக்க வில்லையாம். 

நம் கைகளை வலுவடையச் செய்யும் உடற்பயிற்சி !

மாறாக, அடிமைகளுக்கு போனஸ் வழங்கும் பழக்கம் கொண்டிருந்துள்ளனர். இதனால், அடிமைகள் அதிகமாக, உத்வேகமாக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை திகழ்ந்து வந்துள்ளது.

ஆச்சரியங்கள்!

ஆச்சரியங்கள்

சில தருணங்களில் அடிமையில் இருந்து விடுதலை பெற்றாலும், அதே உரிமையாளரிடம் சம்பளத்திற்கு வேலை செய்யும் நபராக தொடர்வார்கள். 

சில சமயங்களில் விடுதலையும் கொடுத்து, அந்த அடிமைக்கு கூடுதல் அடிமைகள் கொடுத்து, அவருக்கு உரிமையாளர் அந்தஸ்து கொடுப்பார்கள். 

சிலர் ரோமாபுரி குடிமகனாக மாறி அங்கேயே வாழ்ந்தும் வந்துள்ளனர்.

நானூறு டாலர்கள்!

நானூறு டாலர்கள்!

1850-களில் தோராயமாக ஒரு அடிமைக்கு நானூறு டாலர்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாம், 

பெண்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஆண்களின் ரகசியங்கள் !

தனக்கு வேண்டிய அடிமையை அவர்கள் சந்தையில் இந்த பணத்தை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். இந்த பணத்தின் இன்றைய மதிப்பு 12,000 டாலர்கள் என கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் ராஜ்ஜியம்!

பிரிட்டிஷ் ராஜ்ஜியம்!

பிரிட்டிஷ் ராஜ்ஜியம் தனக்கு கீழ் இருந்த அரசாட்சி இடங்களில் அடிமைகளை வாங்கும், விற்கும் முறைக்குக் தடை விதித்த போது. 

அன்று வரை அடிமைகள் கொண்டிருந்த 46,000 மேல்தட்டு மக்களுக்கு இழப்பீடு என்ற முறையில் தானாக முன்வந்து பணம் கொடுத்து, அடிமைகளுக்கு விடுதலை கொடுத்தது. 

ஆனால், இந்த 46,000 பேரிடம் இருந்து விடுதலை பெற்ற எட்டு இலட்சம் பேருக்கு ஒரு நயாப்பைசா கூட தரப்படவில்லை.

1526 - 1867!

பயணத்தின் நடுவே பசி, கொடுமை, சித்திரவதை

1526 முதல் 1867 வரை ஆப்ரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு கடல் வழியாக 12.5 மில்லியன் மக்கள் அடிமைகளாக அனுப்பட்டுள்ளனர். 

பெண்களிடம் அதிகரிக்கும் ஆண் தன்மை மீசையும், தாடியும் முளைக்கிறது !

ஆனால், இதில் இந்த கப்பல் பயணத்தை கடந்து அந்த பக்கம் உயிருடன் சென்றவர்கள் எண்ணிக்கை வெறும் 10.7 மில்லியன் தான். 

பயணத்தின் நடுவே பசி, கொடுமை, சித்திரவதை, தப்பித்தல் காரணங்களால் ஏறத்தாழ 1.8 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

அடிமை முறை ஒழிந்து விட்டதா? 

அடிமை முறை ஒழிந்து விட்டதா ?

ஒரு காலத்தில் அதிதீவிரமாக இருந்த அடிமை முறை இன்று சட்டத்தால் தடை செய்யப்பட்டு விட்டது. 

ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு தொழிலாளிக்கு முன் பணம் கொடுத்து வலுக்கட்டாயமாக வேலை வாங்குவது, 

அந்த தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்காமல் இருப்பது, விரும்பிய பணிக்கும், விரும்பிய இடத்துக்கும் 

சர்க்கரை நோயாளிகள் உடலில் நோன்பு என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும்?

செல்லவிடாதபடி அவரைத் தடுப்பது என்ற அடையாளங்களைப் பெற்று அடிமை முறையானது கொத்தடிமை முறையாகி யிருக்கிறது. 

இப்படி ஏதோ ஒரு முகமூடி அணிந்து அடிமைத்தனம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings