சமூகத்தில் காலம் காலமாக இப்படி தான் செய்ய வேண்டும் என வைத்துள்ள சில விஷயங்களை மாற்றி அமைப்பது சாதரண விஷயமல்ல.
ஆனால் சிலர் அதையெல்லாம் தாண்டி சமூகத்திற்கு பிடித்த மாதிரி இல்லாமல் தங்களுக்கு பிடித்த மாதிரி வாழ்பவர்களும் உண்டு. அப்படியான ஒரு நிகழ்வு தான் இப்போது நடந்துள்ளது.
சேலஞ்சிற்கு மறுத்த நபரின் வங்கி கணக்கை வெளியிட்டு மிரட்டிய மோமோ !
பொதுவாக திருமணத்தின் போது மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவது வழக்கமான நிகழ்வாகும்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு, மணமகள் தாலி கட்டியுள்ளார்.
புதுமை திருமணம் செய்து கொண்ட மணமகன் ஷார்துல் கதமும், மணமகள் தனுஜாவும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. ஷாரதுலும் தனுஜாவும் கல்லூரியில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.
2 அவித்த முட்டையின் விலை ரூ.1,700 இதிலென்ன தப்பு !
ஆனால் பட்டம் பெற்ற பிறகும் அவர்களது காதல் கதை நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. நாங்கள் இருவரும் எதிர்பாராத விதமாகவே இணைந்தோம் என கூறியுள்ளனர்.
அவர் ஒரு பாடலை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தாராம். அப்போது அதை பார்த்த தனு அது சித்திரவதையான பாடல் என கூறியுள்ளார்.
அதற்கு ஷார்தல் இல்லை அது மகா சித்திரவாதையான பாடல் என கூறியுள்ளார். இப்படியாகத் தான் அவர்கள் இருவரும் பேச துவங்கினார்களாம்.
சில வாரங்கள் கழித்து தனுஜா தேநீருக்காக ஷார்துலை அழைத்து அவரிடம் பெண்ணியம் பற்றி பேச துவங்கிய போது ஷர்துலும் தன்னை ஒரு பெண்ணியவாதி என கூறியுள்ளார்.
“நான் அப்படி சொல்லும்போது அவள் அதை எதிர்ப்பார்க்கவில்லை என்பது போல பார்த்தாள்” என்று அவர் கூறியுள்ளார். பிறகு அவர்கள் இருவரும் காதலிக்க துவங்கினர்.
படிக்காத மேதையின் சம்பளம் 21 கோடி
கொரோனா அலை ஓய்ந்த பிறகு 2020ல் திருமணத்திற்கான திட்டங்களை அவர்கள் வகுத்தனர். “நான் தனுஜாவிடம் 'ஏன் ஒரு பெண் மட்டுமே தாலி கட்ட வேண்டும் எனக்கு புரியவில்லை?' என்றேன்.
அதனால், எங்கள் திருமண நாளில் நானும் தாலி கட்டிக்கொள்வேன் என நான் கூறினேன்” என்று ஷர்துல் தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சரியப்பட்டனர். அவருடைய முடிவை அவர்கள் ஏற்கவில்லை. ஆனால் ஷர்துல் தனது முடிவில் தீர்க்கமாக இருந்தார்.
இருவரும் தாலி கட்டிக்கொள்வது தான் சமத்துவம் என அவர் கூறியுள்ளார். ”அதிகப்பட்சம் திருமணங்களில் அதிக செலவுகள் மணப்பெண்ணின் வீட்டிடமே அளிக்கப்படுகிறது.
கவர்ச்சிக்கு கிடைக்கும் மதிப்பை பாருங்க புரியும் !
ஆனால் நான் தனுஜாவின் பெற்றோரிடம் சென்று எல்லா செலவுகளையும் இரு வீட்டாரும் இரு பங்காக பிரித்து செய்துக் கொள்வோம் என கூறி விட்டேன்” என அவர் கூறினார்.
அவர்களின் திருமணமானது அமோகமாக நடந்தது. இந்தியாவில் திருமணத்தை பொறுத்த வரை சாதி வாரியாக ஊர் வாரியாக என திருமண முறைகள் மாறிக் கொண்டே இருக்கும்.
அதனால் இது ஒரு பெரிய விஷயமாக சிலரால் பார்க்கப்பட வில்லை என்றாலும் சில ஆண் உறவினர்கள் இதனால் வருத்தமடைந்தனர்.
ஆனால் அவர்கள் மணமக்களிடம் இதுக்குறித்து எதுவும் கேட்கவில்லை.ஆனால் அடுத்த நாள் இந்த தம்பதிகள் சமூக ஊடகங்களில் பயங்கரமான பின்னடைவை சந்தித்தனர்.
ஒரு டிஜிட்டல் செய்தி தளமானது இவர்களது கதையை வெளியிட்டது. “இதற்கு மக்கள் கருத்து தெரிவிக்க துவங்கினர். “அதான் தாலி கட்டி கொண்டீர்களே.
சிறுமிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்தவர்களுக்கு சிறை தண்டனை !
அப்படியே சேலையும் உடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு மாதம் ஒரு முறை மாதவிடாய் ஏற்படுகிறதா” என்று கூறினர்.
சில தாராளவாதிகள் கூட ‘பாலின சமத்துவத்தை ஆதரிப்பதற்கான வழி இதுவல்ல’ என என்னை கேலி செய்ய துவங்கினர். என அவர் கூறுகிறார்”.
இந்த மாதிரியான கேலி, கிண்டல்கள் வரும் என தான் ஏற்கனவே எதிர்ப்பார்த்ததாக ஷர்துல் கூறுகிறார். ஆனால் முதலில் இதனால் தனுஜா தான் பாதிக்கப்பட்டார்.
நீர் கட்டி (Cyst) என்றால் என்ன?
எங்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த கேலியெல்லாம் நாங்கள் கடந்து விட்டோம்” என அவர் கூறுகிறார்.
”ஏனென்றால் தனுஜாவும் நானும் மற்றவர்களை விடவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாங்கள் வீட்டு வேலைகளை ஒருவருக்கொருவர் பங்கிட்டு கொள்கிறோம்.
மாம்பழத்தால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது !
ஒருவருக்கொருவர் எங்கள் கனவுகளுக்கு மதிப்பளிக்கிறோம். எனவே இந்த உலகம் எங்களை பற்றி என்ன நினைக்கிறது என்பது குறித்து எங்களுக்கு எந்த விதமான கவலையும் கிடையாது” என ஷர்துல் கூறுகிறார்.
ஷர்துல் மற்றும் தனுஜாவின் இந்த கதை இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. இவர்களின் கதைக்கு 82,000க்கும் மேற்பட்டவர்கள் லைக் கொடுத்து உள்ளனர். மேலும் பேஸ்புக்கிலும் பலர் இதை விரும்பி உள்ளனர்.
Thanks for Your Comments