தற்போதைய காலகட்டம் நமக்கு உடல் பாதுகாப்பு மிக அவசியம் என்பதை புரிய வைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
கொத்த மல்லியைப் போன்றே மல்லி விதைகளும் நல்ல மணத்துடன் இருக்கும். இது உணவின் மணத்தையும், சுவையையும் மேம்படுத்த சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படி சமையலில் சேர்க்கும் மல்லி விதைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. பொதுவாக நாம் சமையலில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளுமே பல்வேறு நன்மைகளை தன்னுள் கொண்டிருக்கும்.
ஆயுஷ் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், தானியா சேர்த்த வெது வெதுப்பான நீர் ஒரு ஆரோக்கியமான உணவு முறையாகும்.
லைஃப் பயிற்சியாளரும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான லூக் கோடின்ஹோ கூட இது இந்தியர்களின் மிகவும் சத்தான மசாலாப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மருத்துவ குணம் நிறைந்த மல்லியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், எனர்ஜி போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
இத்தகைய மல்லியை ஒருவர் நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
உடலின் ஒட்டு மொத்த நல்வாழ்வுக்கு நீங்கள் ஒரே ஒரு தீர்வைத் தேடுகிறீர்கள் என்றால், அது தனியாவாக இருக்கலாம.
தனியா சேர்த்து தயாரித்த நீரின் நன்மைகள் மற்றும் அதை நீங்கள் எவ்வாறு வீட்டில் தயாரிக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
தனியா நீர் செய்வது எப்படி?
அடுத்து அதனை குளிர்வித்து, நன்கு தனியாவை கசக்கி, பிழிந்து விட்டு அந்த நீரை குடிக்கவும். இது அதிக நன்மைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சர்க்கரை நோய்
கொத்தமல்லி விதை நீரிழிவு எதிர்ப்பு மருந்தாக பல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கொத்தமல்லி விதை இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும்.
மேலும் கொத்தமல்லி விதை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும்.
சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கொத்தமல்லி நீரை தினமும் குடிக்க பரிந்துரைக்கப் படுகிறார்கள்.
அதற்கு இரவில் தூங்கும் முன் சிறிது கொத்தமல்லி விதைகடிள நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும்.
வெப்பத்தை தனிக்க உதவுகிறது
அப்போது நீங்கள் கொத்தமல்லி தண்ணீரை ஒரு நாளைக்கு 3-5 முறை குடிக்கவும், அதன் குளிரூட்டும் பண்புகள் உடனடியாக உடல் உடல் சூட்டை தனிக்கும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கும்.
சில ஆய்வாளர்கள், கொத்தமல்லி விதைகள் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதாக கூறுகின்றனர்.
அதற்கு 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும். வேண்டுமானால், சுவைக்கு சிறிது தேன் கலந்து கொள்ளலாம்.
செரிமானத்தில் பயனுள்ளதாக இருக்கிறது
அவை செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன மற்றும் எடை குறைப்புக்கு பயணத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
ஆஸ்டியோபோரோசிஸ்
கொத்தமல்லி விதைகளில் உள்ள ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, நியாசின், கரோட்டீன், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி போன்ற அனைத்துமே ஆன்டி - ஆக்ஸிடன்ட் போன்று செயல்படுகிறது.
இந்த விதைகளில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆஸ்டியோ போரோசிஸைத் தடுக்கும்.
அதற்கு கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிக்கலாம் அல்லது 3 கிராம் கொத்தமல்லி பொடியை 150 மிலி கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம்.
சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது.
ஏனெனில் இது உடலில் நீர் தக்க வைப்பதை குறைக்க வழிவகுக்கிறது. மேலும் அனைத்து வகையான நச்சுகள் மற்றும் நுண்ணுயிரிகளையும் வெளியேற்ற அனுமதிக்கிறது.
கீல்வாதம் வலியை நீக்குகிறது
இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் படி, கொத்தமல்லி மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது,
மேலும் இந்த விதைகளில் லினோலிக் அமிலம் மற்றும் சினியோல் போன்ற சேர்மங்கள் நிரம்பியுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது,
இது மூட்டு அழற்சி வலிக்கு சிகிச்சையளிக்க உதவும், மேலும் வீக்கமும் குணமடைய உதவி செய்கியது.
இரத்த சோகை
இந்த கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
Thanks for Your Comments