ரேஷன் விநியோகஸ்தர்கள் அட்டை வைத்திருப்பவர் களுக்கு நிலையான தானியத்தின் பங்கைக் காட்டிலும் குறைவாகக் கொடுப்பதை நாம் சில இடங்களில் காண முடிகிறது.
இதற்காக, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கட்டணமில்லா எண்ணில் புகார் செய்வது தான். நீங்கள் எந்த எண்களைப் புகார் செய்யலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
குறுஞ்செய்தி சேவைகள்
சில நேரங்களில் ரேஷன் கடைகளில் பொருள் இல்லை என்று ரேஷன் கடை பொறுப்பாளர் சொல்வதையும் காண முடிகிறது.
அது போன்று சில நேரங்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது.
இந்தத் தகவல் உண்மைதானா அல்லது பொய்யா என்று பல நேரங்களில் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர்.
ஆனால் தமிழக அரசின் சார்பாக எளிமையான முறையில் ஒரு எஸ் எம் எஸ் (SMS) மூலமாக உங்கள் அருகாமையில் இருக்கும் ரேஷன் கடைகளில் உள்ள
பொருட்களின் நிலை குறித்தும் ரேஷன் கடை இன்று திறந்து உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
குறுஞ்செய்தி SMS
PDS <இடைவெளி> 101 - 9773904050 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக SMS) தங்களது Smart card (ஸ்மார்ட் கார்டு) உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைலில் இருந்து கைபேசி எண்ணிலிருந்து அனுப்பவும்.
ரேஷன் கடை திறந்து உள்ளதா என்பதை அறிய
புகார் அளிக்க:-
ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார்கள் இருந்தால் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
PDS என டைப் செய்து இடைவெளிவிட்டு 107 என டைப்செய்து 99809 04040 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.
அதன் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
www.tnpds.gov.in ல் புகார் பதிவு செய்யும் பகுதியை கிளிக் செய்து பெயர், அலைபேசி எண், இமெயில், புகாரின் வகைப்பாடு தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு, பிரச்னைக்குரிய விவரங்களை கொடுத்து புகாரை பதிவு செய்யலாம்.
இதே போல் பிளே ஸ்டோரில் (Play Store) 'TNEPDS' செயலியை பதிவிறக்கம் செய்து, ரேஷன் கடையில் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்.
அலைபேசிக்கு வரும் 'ஓ.டி.பி.,' யை கொடுத்து உள்ளே நுழையலாம்.
வீட்டில் இருந்தபடியே ரேஷனில் வாங்கிய பொருட்கள், இருப்பு விவரம், கடை இருக்கிறதா இல்லையா, பொருட்கள் வழங்கல் குறித்து புகார்களை பதிவு செய்யலாம்.
Thanks for Your Comments