ஆக்ஸிஜன் கொடுங்க அம்மாவுக்கு சீரியஸ் கெஞ்சிய பெண் !

0

டில்லியில் தனியார் மருத்துவமனையான பத்ராவில், சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காததால் மருத்துவர் உட்பட எட்டு நோயாளிகள் இறந்தனர். 

தனியார் மருத்துவமனையான பத்ரா
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் தலைநகர் டெல்லி திண்டாடி வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாத நிலையில், 

ஆக்ஸிஜன் நிரப்பும் இடங்களுக்கே சென்று வரிசையில் காத்திருந்து ஆக்ஸிஜன் வாங்கி வரும் நிலைக்கு நோயாளிகளின் உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டரை தருமாறு பெண் ஒருவர் மண்டியிட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்கடித்துள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் ஸ்ருதி சஹா. இவரது தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக டெல்லியின் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதிகளில் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் மையத்திற்கு வெளியே காத்திருந்தார்.

ஆக்ஸிஜன் கொடுங்க அம்மாவுக்கு சீரியஸ் கெஞ்சிய பெண் !

அப்போது அங்கிருந்த காவலர்களிடம் ஸ்ருதி கெஞ்சுகிறார். ஆலையை உடனடியாக திறக்க வேண்டும். 

ஆக்ஸிஜன் கிடைத்தால் தான் எனது தாயின் உயிரை காப்பாற்ற முடியும் என கெஞ்சி கதறி அழுகிறார். ஒரு கட்டத்தில் மண்டியிட்டு ஆக்ஸிஜன் கொடுங்கள் கேட்கும் காட்சிகளும் நடந்தன.

இந்த நிலையில் அவருக்கு ஒரு போன் வந்தது. அதில் ஸ்ருதியின் அம்மா மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்ட ஸ்ருதி அப்படியே மனம் உடைந்து போய் அழுதார். 

அவரை சுற்றி யிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர். அப்போது ஸ்ருதி அதிகாலை 2 மணியிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை தேடி வந்தோம்.

இந்த இடத்தில் கிடைக்கும் என்றார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அம்மாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என அவர்களிடம் நான் சொல்லி அழுது கொண்டிருந்தேன். 

ஆக்ஸிஜன் கொடுங்க அம்மாவுக்கு சீரியஸ்

ஆனால் ஆலையை உடனடியாக திறக்கவில்லை. இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என கதறினார்.

பின்னர் அவரை ஒரு இளைஞர் கையை பிடித்து தூக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் நடைபெறுகின்றன. 

தங்களது அன்புக்குரியவர்களின் உயிரை காக்க ஆக்ஸிஜனுக்காகவும் மருத்துவமனை படுக்கைக்காகவும் பலர் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings