எனக்கும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை நடிகர் காளி வெங்கட் !

0

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை பிறப்பித்துள்ளது. 

எனக்கும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிக்கலான நிலையில் இருந்ததாக பிரபல நடிகரான காளி வெங்கட் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறந்த துணை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் குணச்சித்திர நடிகரான காளி வெங்கட் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

முன்னணி நடிகர்கள் பலருடன் சின்ன கதாபாத்திரங்களில் இணைந்தும் நடித்துள்ளார்.  விஜயின் மெர்சல், தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இதே போல் தனுஷுடன் மாரி 2, கொடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் காளி வெங்கட்.  

சூர்யாவின் சூரரைப்போற்று சிவகார்த்திகேயன் வேலைக்காரன், ஜெயம் ரவியின் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

கடைசியாக நடிகர் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார் காளி வெங்கட். அந்த வீடியோவில் தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளார் நடிகர் காளி வெங்கட். 

மூச்சு திணறல், இருமல் என அனைத்து அறிகுறிகளும் இருந்து சிக்கலான நிலையில் இருந்து மீண்டதாக கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது, இந்த வீடியோவை வெளியிடலாமா வேண்டாமா என்று யோசித்தேன். 

ரமேஷ் திலக் திட்டியதால் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.

22 நாட்கள் அறிகுறிகள் இருந்தன. இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்ததால உடனே அட்மிட் ஆகனும்னு சொன்னாங்க.  

நடிகர் காளி வெங்கட் !

அட்மிட் ஆகனும்னு போனா மருத்துவமனையில் இடமில்லை. போன மாசம் தான் இது நடந்தது. சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல் போன வழக்கம் போல அங்க இடமில்லை. 

போன மாசம் தான் இது நடந்தது. நான் இதுல இருந்து வென்றே தீருவேன்னு என்றெல்லாம் நினைக்கல. வந்துருச்சு அடுத்த என்ன பண்ணலாம்ன்னு தான் இருந்தேன்.

டாக்டர் முருகேஷ் பாபு தான் ரொம்ப உதவியா இருந்தாரு. கொரோனா வராம பார்த்துக்குறது தான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. 

அதானல வராம பாதுகாத்துக்குங்க, சேஃப்பா இருங்க, வந்துடுச்சுன்னாலும் அலட்சியமா இருக்காதீங்க. 

மருத்துவர் சொல்றத கேளுங்க. இவ்வாறு நடிகர் காளி வெங்கட் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings