என் உயரம் குறித்து தாழ்வாக நினைத்துள்ளேன்... நடிகை அனிகா !

0

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். 

என் உயரம் குறித்து தாழ்வாக நினைத்துள்ளேன்... நடிகை அனிகா !
அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் மீண்டும் அவருக்கு மகளாக நடித்தார் அனிகா.

செட்டில் அஜித்தை அப்பா என்று தான் அழைப்பேன் என பேட்டி ஒன்றில் கூறினார். அனிகாவை அஜித் மகளாகவே அவரின் ரசிகர்கள் பார்க்கிறார்கள். 

அதனால் தல பொண்ணு என்று அவரை செல்லமாக அழைக்கிறார்கள். அனிகா நன்றாக வளர்ந்து விட்டார். 

அவர் அவ்வப்போது விதவிதமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் கருவி !

அவர் சேலை அணிந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, ஹீரோயினாக நடிக்க அனிகா தயாராகி விட்டார், இனியும் அவரை சின்னக் குழந்தையாக நடிக்க வைக்க முடியாது என்றார்கள்.

நடிகை அனிகா கதாநாயகிகளுக்கு போட்டியாகவே இருந்து வருகிறார்.
அனிகா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். 

இந்நிலையில் அவர் லைவ் சாட்டில் வந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் அளித்தார்.

கண் இமைப்பது ஏன்? கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா?

அப்பொழுது ரசிகர் ஒருவர் கேட்டதாவது,

உங்களின் தீவிர ரசிகர் ஒருவர் தன் காதலை சொல்லி, அதை நீங்கள் ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்றார்.

அதற்கு அனிகா கூறியதாவது, அது எனக்கு நடந்திருக்கிறது. இமெயில் மூலம் அப்படி ஒரு ப்ரொபோஸல் வந்தது. அதை பார்த்து எனக்கு பயமாக இருந்தது. 

என் உயரம் குறித்து தாழ்வாக நினைத்துள்ளேன்

ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டு விட்டேன் என்றார்.

அனிகா சுமாரான உயரம் தான். இந்நிலையில் அது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அனிகாவோ, நான் உயரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. 

என் உயரம் 5.2 அடி. அது குறித்து முதலில் வருத்தமாக இருந்தது. ஆனால் குள்ளமாக இருப்பதால் பல நன்மைகளும் இருக்கிறது என்றார். 

புகைப்படங்களில் பார்க்கும் போது இதை எனது பிளஸாக பார்க்கிறேன். ஆண்களின் உடை உள்ளிட்ட எந்த உடை அணியவும் இது சரியாக உள்ளது என்று கூறியுள்ளார். 

நடிகை அனிகா !

எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட விருக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அனிகா நடிப்பார் என்று எதிர் பார்க்கப்படும இவரை,
குழந்தைகளுக்கு பிடித்த தால் அல்வா செய்வது எப்படி?
“லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாராவின் தோற்றத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

தனது தனித்துவமான உடைகள் மற்றும் சர்வதேச அளவிலான தயாரிப்புகளுடன், அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய திரைப்படத் துறையின் சிறந்த கதாநாயகிகளுக்கு போட்டியாகவே இருந்து வருகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings