திருநங்கைகள் அறுவை சிகிச்சைக்கு உதவி தொகை வழங்கிய கேரளா !

0

திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருநங்கைகள் அறுவை சிகிச்சைக்கு உதவி தொகை வழங்கிய கேரளா !
திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப் படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.

பல காலமாக அலி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல், 

மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் 

பாலியல் தொழிலில் கட்டாயப் படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். 

இங்கிலாந்தின் பாதாள நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, இவர்களுக்கு என்று உள்ள குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். 

தற்போது கொஞ்சம் நல் மதிப்பாக திருநங்கைகள் என சற்று மரியாதையுடன் அழைக்கப்பட்டு வருகின்றனர். 

இன்று  ஒருவித பரிணாம வளர்ச்சிப் பெற்று  திருநங்கை யர் என மதிக்கப்படுவதுடன், அவர்கள் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கிறார்கள். 

அவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  திருநங்கைகளை 2015ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.

கொரோனா பாதுகாப்பு உடை  PPE சூட் என்றால் என்ன?

தற்போது ஒருபடி மேலே போய் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருநங்கைகளுக்கு  புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். இது திருநங்கைகளே எதிர்பாராத ஒன்று. 

அதாவது கேரளாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சத்தை கேரள அரசு உதவித் தொகையாக வழங்கும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக  கேரள  முதலமைச்சர்  பினராயி விஜயனின் அலுவலக பேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், சமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும்,  திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 

இந்த உணவை சாப்பிட்டு வந்தால் புற்று நோய், ரத்த அழுத்தம் குறைபாடு வராது !

கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

பினராயி விஜயனின்  அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளில் அனைத்து பாட பிரிவுகளிலும், 

திருநங்கைகளுக்காக கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் கேரள அரசு  அறிவித்துள்ளது. 
கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ! 

மேலும் பல்வேறு துறையிலும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதன்மை மாநிலமாக பினராயி விஜயனின்  அரசு செயல்பட்டு வருகிறது.

திருநங்கை ஆயிஷா பாரூக் அவர்களின் வரிகளில் திருநங்கை என்பவள்.. 

மங்கையானவள் திருநங்கையானவள் நிழலின் இருளில் சிரிப்பவள் அன்பின் ஊற்றாய் பிறந்தவள் வலியின் வலியை தாங்கியவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள் ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings