தங்கத்தில் ஒரு கிலோ தாலி வைரலான சர்ச்சை புகைப்படம் !

1 minute read
0

மஹாராஷ்ட்ரா பிவந்தி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு கிலோ தங்கத்தில் தாலி அணிந்திருந்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. 

தங்கத்தில் ஒரு கிலோ தாலி வைரலான சர்ச்சை புகைப்படம் !
அந்த நகையானது, அப்பெண்ணின் கணவர் பரிசளித்திருந்தார் என்றும் அந்த வீடியோ மூலம் அறியப்பட்டது.

வீடியோ வைரலான பிறகு, புகழ் மட்டுமின்றி சர்ச்சையும் கூடவே சேர்ந்து பெரிதாக துவங்கியது. 

வீடியோ வைரலான பிறகு போலீசார், அந்த வீடியோவில் காணப்பட்ட பெண்ணின் விலாசம் கண்டறிந்து, விசாரணை நடத்தினர். 

மேலும், அந்த நகையின் உண்மை தன்மையை பரிசோதனை செய்து பார்த்தனர். பின்னர், போலீசார் விசாரணையின் முடிவில், அந்த ஒரு கிலோ தங்க ஆபரமானது ரூ.38,000 மதிப்பிலான போலி தங்க நகை என கண்டறியப்பட்டது.

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ! 

இதனால் அப்பெண்ணின் கணவர் பாலா என்பவரை போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். 

அப்போது அவர் போலீசாரிடம், அது தங்கம் போல காட்சியளிக்கும் போலி நகை. அதன் மதிப்பு ரூ.38,000 தான் என பதில் அளித்திருந்தார். 

மேலும் இது சமூக ஊடகத்தில் கவனம் ஈர்க்க செய்யப்பட்ட செயல் என்று, சர்ச்சையில் முடிந்துள்ளது. விசாரணை முடிவில் பாலா காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த வீடியோ வைரலானதை அடுத்து எங்கள் கவனத்திற்கு வந்தது. 

காஸ் சிலிண்டருக்கு காப்பீடு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று !

பொதுவெளியில் இவ்வளவு நகைகள் இருப்பதை வெட்ட வெளிச்சமாய் காண்பிப்பது, குற்றவாளிகளை, திருடர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதற்கு சமம். 

எனவே, நாங்கள் அந்த வீடியோவில் இருக்கும் நபர்களின் தகவல்களை சேகரிக்க துவங்கினோம்.

அப்போது தான் பாலா பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அந்த 1 கிலோ தாலி குறித்து விசாரணை நடத்தினோம். 

அப்போது, பாலா... தான் அதை ஒரு நகை கடையில் ரூ.38,000-த்திற்கு வாங்கியதாக கூறினார். 

மேலும், நாங்கள் அந்த நகையை பரிசோதனை செய்தது, அது போலி என்பதை ஊர்ஜிதமானது" என தெரிவித்தார்.

மேலும், தங்களிடம் இருக்கும் நகைகள் குறித்து பொதுவெளியில் பதிவுகள் இடவேண்டாம் என காவல் அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

குழந்தைகளுக்கு பிடித்த காலிஃப்ளவர் சில்லி மசாலா செய்வது எப்படி? 

இது, குற்றவாளிகளை தானாக முன்வந்து தங்கள் வீட்டுக்கு அழைப்பது போன்ற செயல் எனவும் எச்சரித்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 25, March 2025
Privacy and cookie settings