ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலனை தலைமைச் செயலகத்தில் போலீஸ் ஒருவர் ஒருமையில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.
அந்த குழுவில் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், கடந்த ஓராண்டுக்கு மேலாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவருமான மருத்துவர் எழிலன் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஹை ஹீல்ஸை தவிர்க்கவும் !
இந்த நிலையில், குழுவில் நியமித்ததற்கு நன்றி கூறவும், கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தவும்,
இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரமாக நீடித்ததாக தெரிகிறது. பிறகு, முதல்வர் தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட இருந்ததால் மருத்துவர் எழிலன் கீழ் தளத்தில் அவரை வழியனுப்ப காத்திருந்தார்.
டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?
அப்போது, அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் கொடிலிங்கம் "ஏய், யார் நீ.. தள்ளிப்போ" என்று ஒருமையில் பேசினார்.
சுற்றியிருந்தோர், "அவர் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்" என்று கூறியதும் அமைதியானார்.
தொடர்ந்து, முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்த பிறகு, தன்னை ஒருமையில் அழைத்தது யார் என்று அங்கிருந்தவர்களை எழிலன் கேட்டுள்ளார்.
அதற்கு சாந்தமே உருவான சமூக நீதி மருத்துவரான எழிலன் சற்றும் கோபப்படாமல், “சட்டமன்ற உறுப்பினர் என்றில்லை யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள்,
அது மட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்று அறிவுரை வழங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
எனவே, உதவி ஆணையர் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரிக்கு அவரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும், அதிமுக, பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்ட போலீசார் இதுபோன்று தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என்கிறார்கள் உடன் பிறப்புகள்.
பொது மக்களிடம் போலீசார் அராஜகப் போக்குடன் நடந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாகவே இருக்கிறது.
எனவே, போலீசார் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த ஆட்சியிலாவது போலீசாரின் போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Thanks for Your Comments