இந்தியாவில் கொரோனா தாக்கிய புதிதில் பெரிய அளவில் உயிர்களை பலி வாங்க வில்லை. ஆனால் கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்த நிலையில் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறியாமல் முற்றிய பின் மருத்துவமனைக்கு செல்வதே உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
தேங்காய் துருவல் இடியாப்பம் செய்வது எப்படி?
இது ஒருபுறம் எனில் இன்னொரு பக்கம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் முற்றிவிட்டால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை ஆரம்ப நிலையில் கவனிக்காமல் விட்டால் நுரையீரலை பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் தங்கள் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள, சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் மக்கள், பலர்
ஆக்சி மீட்டருடன், உயிர்காக்கும் ஆக்சிஜன் கருவிகளையும் வாங்கி வீட்டிலேயே பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள்.
கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களில் பெரும் பாலோனோருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இதனால், மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை வாங்கி வீடுகளிலேயே உபயோகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டில் ரேஷன் அரிசி இருந்தால் போதும். சுடச்சுட சூப்பரான இடியாப்பம்.
ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால், பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரானிக் டிவைசான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை அதிக அளவு மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
ஆக்சிஜன் அளவு
இவர்கள் மருத்துவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பொதுவாக நிமிடத்திற்கு 5 லிட்டர் அளவில் ஆக்சிஜன் தேவை இருக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
சுலபமான முறையில் செய்யக்கூடிய காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி?
அதிக பாதிப்புக்கு உள்ளாகாத நோயாளிகளுக்கு 2 முதல் 3 லிட்டர் அளவிலான ஆக்சிஜன் ஒரு நிமிடத்திற்கு உடலில் செழுத்தப்படுகிறது.
உடலின் ஆக்சிஜன் அளவு 92 முதல் 96 வரையிலானதாக மாறும் வரை இந்த ஆக்சிஜன் அளவு தேவைப்படுகிறது .
ஆக்சிஜன் உடலில் குறைவதற்கான அறிகுறிகள் என்ன ?
நெஞ்சு வலி
மூச்சு திணறல்
உடல் பலவீனம் அடைதல் பயங்கர சோர்வு
பேசும் போது திணறுவது
நிற்க கூட முடியாமல் இருப்பது
முகம் வெளிரி போய் இருத்தல், முகம் கருப்படைதல்
உதடு வறண்டு போகுதல்
எளிதாக செய்யக்கூடிய தயிர் சிக்கன் செய்வது எப்படி?
மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் கோவிட் நோயாளிகளுக்கு ஏற்பட்டால் உடனே அலார்ட் ஆக வேண்டும். இது போன்ற அறிகுறிகள் உடலில் ஆக்சிஜன் சுழற்சியில் மாறுபட்டிருப்பதை காட்டுகிறது.
ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்
காற்றில் இருக்கும் ஆக்சிஜனை மறுசுழற்சி செய்து தூய ஆக்சிஜனாக கொடுக்கும். ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒருமுறை தீர்ந்து விட்டால், அதனை மீண்டும் நிரப்ப வேண்டும்.
600 ஆண்டுகள் பழமையான கயிற்று பாலம் !
ஆனால், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களில் அந்த பிரச்சனை இல்லை. பேட்டரி ஆயுள் இருக்கும் வரை தேவையான ஆக்சிஜனை சுவாசித்துக் கொண்டே இருக்க முடியும்.
இக்கருவி சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றை சுத்திகரித்து ஆக்சிஜனைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நோயாளிக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் 99 விழுக்காட்டுக்கு மேல் தூய்மையாக இருக்க வேண்டும்.
ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் 94 முதல் 95 விழுக்காடு மட்டுமே தூய்மையான ஆக்சிஜனை வழங்கக் கூடியது என்றாலும்,
கொரோனா போன்ற கொடிய வைரஸ் பிரச்சனையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை இதன் மூலம் சரி செய்ய முடியும்.
உலக சுகாதார மையத்தின் அறிவிப்பின்படி, ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் வாரம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் வடிவமைக்கப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பாதுகாப்பு உடை PPE சூட் என்றால் என்ன?
நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் செலுத்தும் விகிதத்தையும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மானிட்டரில் செட் செய்து கொள்ளலாம்.
ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரின் ஆக்சிஜன் தூய்மை போதுமானதா?
ஆனால், 85 விழுக்காடு அல்லது அதற்கும் மேலாக ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பவர்கள் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஐ.சி.யூ வார்டு நோயாளிகளுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது எனவும் எச்சரித்துள்ளனர்.
ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் ஒரே நேரத்தில் இரண்டு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என்றாலும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.
ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் விரும்பப்படுவது ஏன்?
சிலிண்டர்கள் ஒரு முறை தீர்ந்து விட்டால் மீண்டும் அதனை மறுமுறை நிரப்ப வேண்டும். ஆனால், கான்சன்டிரேட்டர்களில் அந்தப் பிரச்சனை இல்லை.
கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !
ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் நிமிடத்துக்கு 5 முதல் 10 லிட்டர் ஆக்சிஜனை மட்டுமே கொடுக்க முடியும்.
மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு நிமிடத்துக்கு 40 முதல் 50 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும். அந்த சமயங்களில் கான்சன்டிரேட்டர்களை பயன்படுத்த முடியாது.
இதில் இருக்கும் ஆக்சிஜன்களை பாதுகாக்க சிறப்பு வெப்பநிலையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. மின்சாரம் மற்றும் சுற்றுப்புற காற்று இருந்தால் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களுக்கு போதும்.
ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் விலை
சிலிண்டர்களுடன் ஒப்பிடும் போது ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களின் விலை பன்மடங்கு அதிகம். ஒரு சிலிண்டரை சந்தையில் 8,000 முதல் 20,000 ரூபாய்க்குள் வாங்க முடியும்.
காஸ் சிலிண்டருக்கு காப்பீடு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று !
ஆனால், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் விலையானது 40,000 ரூபாய் முதல் ரூ. 90,000 வரை விற்பனையாகிறது.
சிலிண்டர்களைப் போல் மறுமுறை நிரப்புதல் மற்றும் போக்குவரத்து செலவுகள் இல்லை என்றாலும் மின்சாரம், தொடர் பராமரிப்பு அவசியம்.
சந்தை நிலவரம்
ஆண்டுக்கு 40,000 கான்சன்டிரேட்டர்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் இருந்து தற்போது மாதம் 30,000 முதல் 40,000 கான்சன்டிரேட்டர்கள் தேவை என்ற நிலை உருவாகி யிருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆன்லைனில் இ-பதிவு விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்ள !
நாள்தோறும் 1,000 முதல் 2,000 கான்சன்டிரேட்டர் தேவை இருப்பதாகவும், ஆனால் தேவைக்கு தகுந்த உற்பத்தியாளர்கள் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், பெரும் அளவில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் இறக்குமதி மட்டுமே செய்யப் படுவதாகவும், பிலிப்ஸ், லாங்ஃபியன்( Longfian) போன்ற நிறுவனங்கள் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கிறனர்.
Thanks for Your Comments