வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு இந்தியாவில் பணி துவங்க அனுமதி !

0

இந்தியாவில் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக சிக்கல் இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் என்பது, சாமானியர்களுக்கு எட்டாக் கனியாகத் தான் இருக்கிறது. 

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு இந்தியாவில் பணி துவங்க அனுமதி !
இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதது, பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்கிறார்கள். 

அங்கு செயல்முறை வாய்ப்பு குறைவாக இருக்கும். ஆனால், வெறும் படிப்பாக இல்லாமல் அங்கு ஆய்வாகச் சொல்லித் தருவார்கள். 

இது தான் அங்கு நல்ல விஷயம். அங்கு மருத்துவம் முடித்த பிறகு, இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற, FMGE என்னும் தேர்வை எதிர் கொள்ள வேண்டும். 

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் தேர்வு மிகக் கடினமான ஒன்று. இதில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். 

ஆனால், ஆண்டுக்கு இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப் படுவதால், மாணவர்கள் தொடர்ந்து முயன்றால் தேர்வில் வெற்றி பெறலாம். 

தவிர, இந்த வருடம் முதல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும் நீட் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் பணியாற்ற இது போன்ற தேர்வுகள் இருக்கின்றன” என்றார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அந்த வகையில், சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. 

இன்று (மே 20) முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை துவங்க அனுமதி அளித்து தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில், ஓராண்டு பணி புரிந்த பின்பே மருத்துவ பணி என்ற விதி இருந்தது. 

அதே போல், வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்கள், பயிற்சியின் போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். 

இந்த இரு விதிகளையும் தளர்த்திய தமிழக அரசு, அவர்கள் மருத்துவ பணியை துவங்க அனுமதி அளித்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை கருதி தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings