கொரோனா பாதுகாப்பு உடை PPE சூட் என்றால் என்ன?

0

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் PPE எனப்படும் பாதுகாப்பு உடைகளை கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. 

கொரோனா பாதுகாப்பு உடை  PPE சூட் என்றால் என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4643 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால், PPE பற்றிய தெளிவு மக்கள் மத்தியில் இல்லாததால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

PPE என்றால் என்ன?

PPE kit என்றால் என்ன?

PPE என்பது Personal Protective Equipment. இது, கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் உபயோகிக்கப்படுவது. 

இதில், மாஸ்க், கண்ணாடி, கையுறை, முக கவசம், வைரஸ் தடுப்பு ஆடை, தலை மற்றும் பாதங்களை மூட பயன்படும் உபகரணம் உள்ளிட்டவை அடங்கும்.

PPE-ஐ எப்படி பயன்படுத்துவது?

உலக சுகாதார அமைப்பின் விளக்கத்தின்படி, PPE-ஐ மாற்றுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. 

அதாவது, முதலில் இந்த தற்காப்பு உடையை அணிவதற்கான இடத்தை முதலில் தேர்வு செய்து, பின்னர் உடையை அணிய வேண்டும். 

PPE-ஐ எப்படி பயன்படுத்துவது?

உடல் முழுவதையும் மறைக்கும் உடைய அணிந்த பின்னர் மாஸ்க் அணிய வேண்டும். அதன் பின்னர் முகத்திற்கு மூட பயன்படும் ஷீல்டை அணிய வேண்டும். 

அதன் பின்னர், க்ளொவ்ஸ் அணிந்து அதன்பிறகு தலை மற்றும் பாதத்தை மூட வேண்டும். 

இஞ்சி, பூண்டு இல்லாத பாசுமதி அரிசி பிரியாணி செய்வது எப்படி?

இந்த கவச உடைய அணிந்து, வேலைகளை முடித்து விட்டு கழற்றிய பின்னர் மறக்காமல் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings