ஆற்றில் மிதக்கும் சடலங்களால் பீதியில் குடியிருப்புவாசிகள் !

0

யமுனை ஆற்றில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்து வருவதால் கிராமவாசிகள் அச்சமடைந்துள்ளனர். ஆற்றில் மிதக்கும் சடலங்களால் பீதியில்  குடியிருப்புவாசிகள் !

இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ள தாகவும், 

நோய் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ள தாகவும் உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பல மிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர்.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு பல தகன மயானங்களில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. உடல்களைத் தகனம் செய்ய விறகுகளும் கிடைக்கவில்லை. 

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பல ஆயிரம் செலவு செய்து தகனம் செய்ய முடியாத நிலையில் உள்ளதால் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்படியே ஆற்றில் விட்டு விடுகின்றனர்.

கங்கை ஆறுகளில் மிதந்து வரும் சடலங்களை நாய்கள் கடித்து குதறி சேதப்படுத்துகின்றன.

ஆற்றில் மிதக்கும் சடலங்களால் பீதியில்  குடியிருப்புவாசிகள் !

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளின் உடல்கள் என்றும், 

இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ள தாகவும் உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கின்றனர். 

இது குறித்து, ஹமீர்பூர் உதவி போலீஸ் சூப்பிரண்ட் அனூப் குமார் சிங் கூறுகையில், யமுனா நதி ஹமீர்பூருக்கும், கான்பூருக்கும் இடையிலான எல்லையாக பாய்கிறது. 

உள்ளூர்வாசிகள் இந்த நதியை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர். மேலும் இறந்த கிராம வாசிகளின் உடல்கள் ஆற்றில் மிதக்க விடுவது ஒரு பழமையான சடங்கு என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற ஒரு சம்பவம் பீகாரிலும் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலம் கதிஹாரில் இருந்து கோவிட் பாதிக்கப் பட்டவர்களின் உடல்கள் ஆறுகளில் கொட்டப்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், 

மருத்துவமனை ஊழியர்கள் உடல்களை ஆற்றில் கொட்டுவது குறித்து விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings