அக்காவுக்கும் கணவனை தாலி கட்ட செய்து வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை !

0

திருமணத்திற்கு பிறகு தன் மகளை திருமணம் செய்த கணவருக்கும் தன் பெண்ணுக்கும் மற்றும் தங்களின் பெண் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கும், 

அக்காவுக்கும் கணவனை தாலி கட்ட செய்து வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை !
தேவையானவைகளை பூர்த்தி செய்யும் கடமைகளை தங்களின் பொறுப்பாக ஏற்று எந்த அளவிற்கு தான் ஒரு பெண்ணை பெற்றவர்கள் தாங்களின் குடும்ப பாரத்தை சுமக்க முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு தான் முன்னோர்கள் பெண்ணை திருமணம் செய்து மருமகளாக இன்னோரு குடும்பத்திற்க்கு அனுப்பி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். 

ஒரு ஆணுக்கு இரண்டு பெண்ணை திருமணம் செய்து வைக்க யாரும் வரும்பவும் மாட்டார்கள்.  மேலும் பெண் தன் கணவரை யாருடனும் பகிர்ந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள்.  

ஆனால் கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளியான அக்காளுக்கு, ஒரு தங்கை தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்து உள்ளார். 

அது பற்றிய விவரம் வருமாறு:- 

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்று திறனாளி ஆவார். இவரது தங்கை லலிதா.

மாற்றுத்திறனாளி என்பதால் சுப்ரியாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. 

இந்த நிலையில் லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அவர்களின் திருமணம் நேற்று நடக்க இருந்தது.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளி என்பதால் எனது அக்காவை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை என்றும், 

இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் உமாபதியிடம், லலிதா கூறியதாக தெரிகிறது. 

ஆனால் இதற்கு உமாபதி மறுத்தார். ஆனால் எனது அக்காவையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று உமாபதியிடம், லலிதா கூறியதாக தெரிகிறது.

பின்னர் இதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி, தனது குடும்பத்தினரிடமும் பேசி சுப்ரியா, லலிதாவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தார். 

இந்த நிலையில் நேற்று ஒரே மேடையில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் புதுமண தம்பதிகளை வாழ்த்தி சென்றனர். 

மேலும் மாற்று திறனாளி அக்காளுக்கு தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings