புழுக்கம் தாக்கும் வரை தூக்கம்... தூக்கம்... தூக்கம்... அரணை !

0

”அரணை கடித்தால் மரண தண்டனை”, ”மண்ணுண்ணிப் பாம்பு கடித்தால் மலையிலும் மருந்தில்லை, ஆனால் மடியில் இருக்கின்றது என்று எமது பெரியோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

புழுக்கம் தாக்கும் வரை தூக்கம்... தூக்கம்... தூக்கம்... அரணை !

உண்மையில் இந்த வாக்கியங்களின் பொருள் நேரடினானவையா என்று சிந்தித்துப் பார்த்தால் இல்லை என்பது தான் விடை வரும். 

சயனைட் கொலையாளி தேள்கள் பற்றிய அதிசய கதை !

அப்படியாயின் எதற்காக எமது முன்னோர்கள் இவ்வாறு சொல்லி யிருக்கிறார்கள்? எமது முன்னோர்கள் எம்மை விட புத்திசாலிகள், 

நவீன உலகுக்குள் தலையைச் செருகியிருக்கும் நாம் இயற்கை தொடர்பான எந்தவொரு தேடலுக்கும் முன்வருவதில்லை. 

ஆனால் நமது அப்பனும் ஆச்சியும் இயற்கையோடே வாழ்ந்து இயற்கையை நேசித்த காரணத்தினால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணத்தினை வைத்து, 

அரணை கடித்தாலும் யாருக்கும் எதுவும் நேராது

அது காலா காலத்தில் அழிவடைந்து போகாமல் இருக்க புடம் போடல்களை வைத்திருந்தார்கள். அரணை கடித்தால் மரண தண்டனை என்று சொன்னமையானது, 

சூரிய புயல் ஏன் ஏற்படுகிறது? அதனால் பாதிப்பு என்ன?

அரணை இலகுவில் யாரையும் நெருங்கி வந்து கடிக்காது, அப்படி கடித்தாலும் யாருக்கும் எதுவும் நேராது. தப்பித்தவறிக் கடிக்கும் அரணைகளை கல்லால் எறிந்து கொன்று விடுவார்களாம். 

இதனாலேயே அரணை கடித்தால் மரன தண்டனை என்று புடம் போட்டார்கள். மண்ணுண்ணிப் பாம்பு கடித்தால் மலையிலும் மருந்தில்லை என்று சொன்னதும் ஒரு புடம் போடல் தான். 

மண்ணுண்ணிப் பாம்பு கடித்தால் மருந்து சுண்ணாம்பு

அதாவது மண்ணுண்ணிப் பாம்பு கடித்தால் மலையில் எல்லாம் மருந்து தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு மடியிலேயே தகுந்த மருந்து இருக்கிறது. 

அது தான் சுண்ணாம்பு என்றனர் எம் முன்னோர். அரணை (skink) என்பது சின்சிடே (Scincidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பல்லி இன ஓந்திகளாகும். 

நம் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள் எவை?

இவை வறண்ட இடங்களில் வசிக்கக் கூடிய உயிரினமாகும். வெப்பமான வேளைகளில் மட்டுமே இவை வெளியில் இயங்குகின்றன. 

இரவு வேளைகளில் கற்களுக்கு அடியிலோ, பொந்துகளிலோ நுழைந்து கொள்ளும். 

நீண்ட குளிர் காலங்களில் பொந்துகளில் நுழைந்து கொண்டு நுழைவுப் பகுதியை பாசியால் அடைத்து விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கத் தொடங்கி விடும்.

புழுக்கம் தாக்கும் வரை தூக்கம்

எதை பற்றியும் கவலையில்லாத உறக்கத்தில் ஆழ்ந்து விடும். அடுத்து பூமியில் வெப்பம் பட்டு, நிலம் சூடாகி, அந்த புழுக்கம் உள்ளே தாக்கும் வரை தூக்கம்... தூக்கம்... தூக்கம் மட்டும் தான்!

அரணையின் தோல் உலர்ந்தது. கொம்புச் செதில்கள் எனும் படிவைக் கொண்டு மூடிக் கொண்டிருக்கும். இத்தோல் அதன் உடலை வறண்ட காற்றில் நீர் ஆவி ஆகாதபடி காக்கிறது. 

ரசிகர்களை கிறங்கடித்த தெய்வமகள் வாணி போஜன் !

இவை தோலினால் மூச்சு விடுவதில்லை. கோடை காலத்தில் அரணை அடிக்கடி தோல் உரித்துக் கொள்ளும். 

உள்ளிருந்து வளரும் புதிய படிவு பழைய தோலுக்கு அடியில் உருவானதும் தோலின் கொம்புப் பொருளிலான படிவு சீரற்ற துண்டுகளாகப் பிரிந்து விழுந்து விடுகின்றன.

அடிக்கடி தோல் உரித்துக் கொள்ளும் அரணை

இவ்வாறான அரணை மிகவும் சாதுவான ஒரு பிராணியாகும். அது மனிதர்களைக் கண்டால் ஓடி மறைந்து விடும். அரணைக்கு மறதிக் குணம் அதிகமாம். 

அதாவது தான் கடிக்க வேண்டும் என்று எதிர் பார்த்த ஒன்றை நோக்கி மெதுவாக வருமாம். ஆனால் கிட்ட வந்ததும் தான் நினைத்து வந்த காரியத்தை மறந்து விட்டு வந்த வழியே திரும்பி விடுமாம்.

தினமும் சுடுநீர் குடிப்பது கிடைக்கும் நன்மைகள் !

அரணை தன் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க உரிய நேரத்தில் தனது வாலினை ஒடித்து விட்டு தப்பி டிடுமாம். 

இத்தகைய அரணை சாதாரணகாக பல்லிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓந்தி இனமாதலால் அது கடிக்கவும் மாட்டாது, கடித்தாலும் விஷமும் ஏற்படாது.

அரணை கடிக்கவும் மாட்டாது, கடித்தாலும் விஷமும் ஏற்படாது.

எதிரிகள் தாக்க வந்தால் அரணை வேகமாக நகர்ந்து பொந்து, கல்லிடுக்குகளில் புகுந்துக் கொள்ளும். அப்போது வாலை உள்ளே இழுப்பதற்குள் எதிரி, வாலை பிடித்து விட்டாலும் கவலையே படாது. 

2 மீட்டர் நீளம் உள்ள கடல் சிலந்தியின் படிமம் கண்டெடுப்பு

வாலை முறித்துக் கொண்டு, உள்ளே சுருங்கி விடும். எதிரி வாலோடு வந்த வழியே திரும்பி போவதை தவிர வேறு வழியில்லை. முறிந்து போன வால் சில நாட்களில் வளர்ந்து விடும். 

நமக்கு நகம் போல, அரணைக்கு வால் வெட்ட வெட்ட வளர்ந்து விடும். கடவுள் படைத்த இந்த உலகத்தில் எந்தவொரு உயிரினமுமே தீங்கான சிந்தனைகளைக் கொண்டிருப்பதில்லை. 

விஷம் என்பதற்காக நாம் பாம்புகளை ஒதுக்கி வைக்கிறோம்

அவற்றின் தேவைகளும் அவசியங்களும் தான் மற்ற உயிரினம் மீதான ஆதிக்கத்தினைச் செலுத்த வைக்கின்றன. விஷம் என்பதற்காக நாம் பாம்புகளை ஒதுக்கி வைக்கிறோம், 

ஒவ்வாமை ஏற்படும் என்பதற்காக சில பிராணிகளை அருவருப்போடு தள்ளி வைக்கிறோம். 

பிரேசிலில் ராட்சத அனகோண்டா !

ஆனால் மனிதப் பிறவியினை எடுத்த நாம், எம்மால் அழிக்கப்படும் எத்தனை தரைவாழ் நீர்வாழ் பிராணிகளால் தள்ளி வைக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings