வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவன், மாமியாரின் செயல்களால் மனம் வெதும்பி போன இளம் பெண்,
இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி கோவில்பட்டி சுபா நகர் சுதர்சன் கார்டனைச் சேர்ந்தவர் சுஜா வயது 29.
சுஜாவுக்கும் விருதுநகர் மாவட்டம் மணிப்பாறைப் பட்டியைச் சேர்ந்த 31 வயதான வீரராகவனுக்கும் 2019ம் ஆண்டு கல்யாணம் நடந்தது.
வீரராகவன், கோவில்பட்டி ஆர்.ஆர். நகரில் ஆட்டோ மொபைல் ஷோரூம் வைத்திருக்கிறார். இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது.
வசியம் உண்டாக்கக் கூடிய மூலிகை !
ஆனால் சுஜாவின் பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் வீரராகவன், அவரது பெற்றோர் கந்தசாமி - அமுதா தம்பதி குடும்பத்தினர் சுஜாவை டார்ச்சர் செய் தொடங்கியுள்ளனர்.
வீரராகவன் குடும்பத்தை தாண்டி, சாத்தூரில் வசிக்கும் வீரராகவனின் சித்தி திலகா உள்ளிட்ட சில உறவினர்களும் சுஜாவிற்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.
இதயத்தை பாதுகாப்பது எப்படி?
சுஜாவிடம் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்று கேட்டு கொடுமைப் படுத்தியதாக சொல்கிறார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த சுஜா கடைசியில் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி தனது குழந்தையுடன் சுஜா, பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். புதன்கிழமை இரவு கணவனுடன் சுஜா செல்போனில் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்
இறுதியில் விரக்தி அடைந்த சுஜா, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ பதிவிட்டு விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Thanks for Your Comments