காக்கிக்கு இன்னொரு பெருமை இருக்குடா... அதில் தியாகத்தின் ஈரம் அதிகம் !

0

அன்று சென்னை புறநகர் பகுதி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திவாகரன் தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்ததும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை அழைத்து "குமார் நான் கிளம்புறேன் .

அதில் தியாகத்தின் ஈரம் அதிகம் !
பண்டிகை காலம் நைட் ரவுண்ட்ஸ் போங்க.எதாவது பிரச்சினைனா எனக்கு கூப்பிடுங்க" என்றதும் குமார் தலையசைத்தார். 

ஸ்டேஷனில் அனைவரும் அவரை வழியனுப்பும் போது ஒரு தம்பதியினர் பரபரப்பாக உள்ளே வந்தனர்.

நேராக திவாகரிடம் வந்து "சார் என் குழந்தைய காணோம் சார்."என்று கதறி அழத் தொடங்கினர் .திவாகர் அவர்களை அமர வைத்து பொறுமையாக விசாரிக்க தொடங்கினார்.

அப்போது குழந்தையின் தந்தை"சார் என் குழந்தை பேரு அபர்ணா.இரண்டு வயசு தான் ஆகுது.அவளுக்கு துணி எடுக்க தான் கடைக்கு வந்தோம்.

கடை தெரு முழுக்க கூட்டம் .அப்போ ஒரு வயசானவர் மயங்கி விழுந்தார் நானும் என் மனைவியும் அவருக்கு உதவி செஞ்சுட்டு இருந்தோம் .

ஊட்டச் சத்துக்கள் | Nutrients !

அபர்ணா பக்கத்தில் தான் நின்னுட்டு இருந்தா.அவர ஆட்டோல ஏத்தி விட்டுட்டு திரும்புனா அபர்ணாவ காணோம் .கடைத்தெரு பூரா தேடிட்டோம் கிடைக்கல சார்"என்று அவரும் அழத்தொடங்கினார்.

அப்போது குமார் "சார் நீங்க கிளம்புங்க.நாங்க தேடி கண்டு புடிக்கிறோம்.நாங்க பாத்துக்குறோம்" என்றதும் பெற்றவர்கள் திவாகர் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தனர். 

வழக்கு பதிவு செய்ய சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றவர்.சிறிது நேரத்திற்கு பிறகு குமாரை அழைத்து "குமார் கிளம்புங்க இந்த கேஸ வேகமா புடிக்கணும்.

ஒரு வேளை குழந்தை கடத்தப் பட்டு இருந்தா நம்ம தாமதம் ஆபத்துல முடிஞ்சிரும். இது மாதிரி நிறைய கேஸ் பாத்திருக்கேன் எனக்கு அனுபவம் இருக்கு. 
உடலுக்கு தைரியத்தைத் தரும் உணவு முறைகள்

நானும் வர்றேன்" என்று வேகமாய் கிளம்பி கடைத்தெருவில் விசாரணையை துவக்கினார். மொத்த காவல் அதிகாரிகளும் திசைக்கு ஒருவராக மிக துரித நிலையில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர் .

சிறிது நேரத்தில் திவாகர் ஒரு தகவலை சேகரித்தார் போன மாதமும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததை கண்டு பிடித்தார்.

இரவு 12 மணியை தாண்டியது குழந்தையின் பெற்றோர் பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து கொண்டு இருந்தனர் . 

அப்போது திவாகருக்கு போன் வர அவர் தனியாக விலகி சென்று பேசி கொண்டு இருந்தார்.பேசிய பின்பு தன் நிலை மறந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தார்.

அவரை பார்த்த குழந்தையின் பெற்றோர் மிகவும் பயத்துடன் "சார் என் குழந்தைக்கு என்னாச்சு?" என்று கதறினர்.

மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா?

உடனே திவாகர் "பயபடாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை கிடைச்சுரும்" என்று தன்னை வேகப்படுத்தி கொண்டு கிளம்பினார்.

அவரது விசாரணையில் இது கடத்தல் என்பதும் முதியவர் மயங்கியது நாடகம் என்பதும் தெரிய வர காவல் துறை வேகமானது திவாகரன் தலைமையில். குற்றவாளிகள் சென்னையை தாண்டியிருக்க முடியாது 

காக்கிக்கு இன்னொரு பெருமை இருக்குடா

இது பண்டிகை சமயம் அதனால் போலிஸ் பாதுகாப்பு பலமாக இருக்கும் .அதனால் நமது வேகம் இன்னும் அதிகரித்தால் அவர்களை பிடித்துவிடலாம் என்பதால் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதயத்தை பாதுகாப்பது எப்படி?

அப்போது அபர்ணாவின் அம்மா கடைத்தெருவில் மயங்கியபடி நடித்த முதியவரை பார்த்து திவாகரிடம் காட்ட முதியவரை காவல் துறையினர் பின் தொடர்ந்தனர்.

சென்னைக்கு அருகில் ஒரு பழைய மண்டபத்திற்குள் இருப்பதை கண்டு பிடித்தனர்.நள்ளிரவு 3 மணிக்கு மேல் திவாகரன் தனது அணியுடன் மண்டபத்தை சுற்றி வளைத்து அனைவரையும் கைது செய்தார்.

அவர்களின் பிடியில் அபர்ணா உட்பட எட்டு குழந்தைகள் கடத்தப்பட்டு இருந்தனர் .அபர்ணாவை அவர்களின் பெற்றோர் வசம் ஒப்படைத்தார். அடுத்த நிமிடம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் !

அவர் சென்றதும் அபர்ணாவின் பெற்றோர் குமாரிடம் "இவருக்கு என்ன சார் பிரச்சினை?"என்றதும் குமார் அவர்களிடம் "சாருக்கு உங்க அபர்ணா மாதிரி கயல்ன்னு ஒரு பொண்ணு இருக்கா.

சரியான அப்பா செல்லம்.ரோம்ப அழகான குழந்தை .ஆனா அந்த சந்தோசம் ரோம்ப நாள் நீடிக்கல.

கயலுக்கு மூளை புற்றுநோய் அதுவும் கடைசி ஸ்டேஜ்.நீங்க ஸ்டேஷன் வர்றதுக்கு முன்னாடி தான் கயலுக்கு உடல்நிலை மோசமா இருக்குனு அவரு மனைவி போன் பண்ணியிருந் தாங்க.
இஞ்சி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

அவரு தன் குழந்தைய பத்தி நினைக்காம உங்க குழந்தைய கண்டு புடிக்க வந்தாரு."பேசி முடிப்பதற்குள் குமாரின் கண்கள்கலங்கின.

திவாகர் ஆஸ்பத்திரி செல்வதற்கும் கயலின் உடல் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது .மகளின் உடல் அருகே சிலையாய் நின்றார் .

அப்போது திவாகரின் மனைவி காவ்யா திவாகரை கட்டி அணைத்து "ஏங்க வரல?அவ கடைசி மூச்சு வரை அப்பா அப்பா தான்ங்க சொன்னா.

நம்ம செல்லத்த கடைசி நிமிஷம் வரை தவிக்க விட்டுட்டீங்களே?" என்று அழுது அவரின் காக்கி சட்டையை தனது கண்ணீரால் ஈரம் ஆக்கினார்.

செம்பருத்தி பூ மருத்துவ பயன்கள் !

திவாகர் தனது மனைவியின் முகம் உயர்த்தி "என் கயல வழியனுப்பி வைக்குறத விட ஒரு குழந்தைய உயிரோட மீட்டு கொடுக்க போயிட்டேன்.

காக்கிக்கு இன்னொரு பெருமை இருக்குடா... அதில் தியாகத்தின் ஈரம் அதிகம் !
என் பொண்ணுக்கு நான் ஒரு நல்ல அப்பாவான்னு தெரியலம்மா ஆனா நான் ஒரு நல்ல போலிஸ் .என் பொண்ணும் அத தான் விரும்புவா எனக்கு தெரியும்.

இந்த காக்கிக்கு இன்னொரு பெருமை இருக்குடா அது தியாகம் "என்றதும் காவ்யா தன் கணவனின் காக்கி உடையை மெதுவாக தடவி பார்த்தாள்.

இந்த உடைக்கு பின்னால் உடைந்து போன இதயம் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும் . [நம் பார்வையில் நமக்கு காட்டும் காவல் துறைக்கு இன்னோர் முகம் உண்டு அதில் தியாகத்தின் ஈரம் அதிகம்] 

மோசன் சிக்னஸ் என்றால் என்ன?

பதிவு பிடித்திருந்தால் பகிர்ந்து நம் தோழர்களை பெருமைபடுத்துங்கள். From Facebook

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings