தேர்தல் டியூட்டிக்கு போன இடத்தில் துயரம் !

0

தேர்தல் டியூட்டிக்கு போன இடத்தில், தன்னுடைய மனைவிக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தேர்தல் டியூட்டிக்கு போன இடத்தில் துயரம் !
இவர் ஒரு பள்ளி ஆசிரியை.. ஏப்ரல் 17 ம் தேதி தேர்தல் பணிக்கு வந்துள்ளார்.. ஆனால் வந்த இடத்தில் இவருக்கு எப்படியோ தொற்று பரவி உள்ளது.. 

அதனால், அடுத்த சில நாட்களில் சந்தியா சிகிச்சையிலும் அனுமதிக்கப் பட்டிருந்தார்.. ஆனால் பலனின்றி இறந்து விட்டார்.

இதையடுத்து, அவரது கணவரின் கம்மம்பதி மோகன் ராவ் மற்றும் 8 வயது மகளும் நிலை குலைந்து போயுள்ளனர். 

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சந்தியாவுக்கு காய்ச்சல் வந்துள்ளது.. அப்போது தான் டெஸ்ட் எடுத்து பார்த்த போது தொற்று உறுதியாகி உள்ளது. 

அதனால், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் ஐசியூவில் சந்தியாவை அனுமதித்துள்ளனர்.

டாக்டர்கள் எவ்வளோ போராடியும் மே 8-ம்தேதி சந்தியா இறந்து விட்டார்.. அவருக்கு வயது 35 வயதாகிறது. 

இது குறித்து அவரது கணவர் சொல்லும் போது, "அவள் என் மனைவி மட்டுமல்ல.. என் உயிரையே இழந்து விட்டேன்.. 

நாட்டில் தான் தொற்று பாதிப்பு இருக்கிறதே, அப்படி தெரிந்தும் எதற்காக தேர்தல்கள் நடத்தப்பட்டன? ஒரு எம்எல்ஏவுக்காக நடத்தப்பட்ட தேர்தலில் பலர் இறக்க வேண்டுமா?

இன்று என் குடும்பமே நிர்க்கதியாய் நிற்கிறது.. லாக்டவுன் முடிஞ்சப்பறம் தேர்தல் நடத்தியிருக்கலாமே? 

அல்லது எல்லாருக்கும் தடுப்பூசி போட்டப்பறம் தேர்தல் நடத்தியிருக்கலாமே?.. தேர்தலின் போது கொரோனா விதிமுறைகள் பல மீறப்பட்டுள்ளன..

அன்றைய தினம், 30 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி ஊழியர்கள் ஒரே பஸ்ஸில் தான் அழைத்து கொண்டு பூத்துக்கு சென்றனர்..

தேர்தல் டியூட்டிக்கு போன இடத்தில் துயரம் !

ஒரு சின்ன கிளாஸ் ரூமில், 5 வாக்குப்பதிவு ஊழியர்கள், 4 வாக்குச்சாவடி முகவர்கள் என குறைந்தது 10 பேர் உட்கார்ந்திருந்தனர்.

அதுவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒன்றாகவே உட்கார்ந்திருந்தனர்.. 

கடைசி நேரத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் வாக்களிக்க வந்த போது கூட, வாக்குப்பதிவு ஊழியர்களுக்கு பிபிஇ கிட் வழங்கப்படவில்லை.. 

கடைசியில் நான் என் மனைவியை பறி கொடுத்து விட்டேன்" என்று கண்ணீருடன் சொல்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings