பாதம் மற்றும் உள்ளங்கையில் கூச்ச உணர்வை தடுக்கும் சில வழிகள் !

பாதங்களில் அல்லது உள்ளங்கையில் என்றாவது கூச்ச உணர்வை உணர்ந்திருக்கிறீர்களா? நீண்ட நேரம் உட்கார்ந்தபடி இருந்து பிறகு எழும் போது பாதங்களில் ஒருவிதமான கூச்ச உணர்வு தோன்றும். 

பாதம் மற்றும் உள்ளங்கையில் கூச்ச உணர்வை தடுக்கும் சில வழிகள் !
இது ஒரு பொதுவான செயல்தான் என்றாலும் மருத்துவ மொழியில் இதனை பரேஸ்டீசியா என்று கூறுவார்கள்.

பொதுவாக கைகள் மற்றும் பாதங்களில் கூச்ச உணர்வு தோன்றுவது வழக்கமாக இருந்தாலும் தொடர்ந்து இந்த நிலையை நீங்கள் அனுபவித்தால் வேறு ஏதாவது பாதிப்பின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். 

அதனால் உங்கள் சந்தேகங்களுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை செய்வது நல்லது. வழக்கமான கூச்ச உணர்வுக்கு சில எளிய தீர்வுகள் உள்ளன. 

இந்த தீர்வுகள் ஓரளவிற்கு உணர்வை கட்டுப்படுத்தும். இந்த எளிய தீர்வுகள் பற்றி நாம் இந்த பதிவில் இப்போது காணலாம்.

கால் விரல் கூச்ச உணர்வுக்கான சில காரணங்கள்:

கால் விரல் கூச்ச உணர்வுக்கான சில காரணங்கள்:

காயங்கள் அல்லது நரம்புகளுக்கு சேதம் விளைவிக்கும் தொடர்ச்சியான இயக்கங்கள் காரணமாக நரம்பு கோளாறுகள்

டி.டி.எஸ் (டார்சல் டன்னல் சிண்ட்ரோம்)

மணிக்கட்டு தசைகளுக்கு காயம்

முடக்கு வாதம்

நீரிழப்பு நிலை

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் ஸ்ட்ரோக்

ரேனாட் நோய்

நீரிழிவு வரலாறு

சிறுநீரக கோளாறுகள்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

வைட்டமின் பி 12 குறைபாடு

வைட்டமின் பி 12 குறைபாடு

வைட்டமின் பி12 பற்றாக்குறை கடுமையான மற்றும் திரும்பவியலாத பாதிப்புகளை குறிப்பாக மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் ஏற்படுத்தலாம். 

இதனால பார்வைக் கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு மற்றும் அசாதாரண உணர்வு – கை, கால், பாதங்களில் குத்தும் 

அல்லது கூச்ச உணர்வு, தசையிணக்கமின்மை – இது முழு உடலையும் பாதித்து பேசவும் நடக்கவும் சிரமம் ஏற்படுத்தும். மரத்துப் போவது அல்லது கூச்ச உணர்வை குறைக்க எளிய தீர்வுகள்:

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

எப்சம் உப்பில் முக்கியமாக மக்னீசியம் மற்றும் சல்பேட் உள்ளது. பலவித கோளாறுகளுக்கு இயற்கையான தீர்வை இந்த உப்பு வழங்குகிறது. 

எப்சம் உப்பு பல்வேறு அற்புத நன்மைகளைக் கொண்டுள்ளது. எப்சம் உப்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கூச்ச உணர்வுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது. 

இந்த உணர்வை குறைக்க எப்சம் உப்பு பயன்படுத்தி கால்களை ஊற விடலாம். இதனால் எரிச்சலுற்ற நரம்புகள் இதமான உணர்வை பெற்று மரத்துப் போவது, கூச்ச உணர்வு போன்றவை குறையலாம்.

* ஒரு டப்பில் பாதி அளவு நீர் எடுத்துக் கொள்ளவும்.

* இந்த நீரில் ஒரு கப் அளவு எப்சம் உப்பு சேர்க்கவும்.

* இந்த கலவையில் உங்கள் கால்களை அரை மணிநேரம் ஊற விடவும்.

* தொடர்ந்து இப்படி செய்வதால் விரைவில் இந்த பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.

லாவண்டர் எண்ணெய்

லாவண்டர் எண்ணெய்

கூச்ச உணர்வு உட்பட பல்வேறு ஆரோக்கிய கோளாறுகளுக்கு அத்தியாவசிய எண்ணெய் சிறந்த தீர்வை தருகிறது . நமது ஒவ்வொரு பாதங்களிலும் 70,000 நரம்புகள் முடிவடைகின்றன. 

அதனால் தான் பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், உடலின் பல பிரச்சனைகள் குணமாகின்றன. பரேஸ்டீசியா போன்ற பாதிப்பை போக்க லாவண்டர் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். 

லாவண்டர் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண தன்மை கொண்டது.

* தேங்காய் எண்ணெயுடன் 10 துளிகள் லாவண்டர் எண்ணெய் சேர்க்கவும்

* இந்த எண்ணெய்யை கூச்ச உணர்வு இருக்கும் கைகள் அல்லது கால்களில் தடவவும்.

* கூச்ச உணர்வு இருக்கும் இடத்தை மென்மையாக மசாஜ் செய்யவும்.

* இரவு உறங்கச் செல்வதற்கு முன் இப்படி செய்வதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

தயிர்:

தயிர்

விட்டமின் B-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தயிர் அல்லது யோகர்ட் உட்கொள்வதால் கூச்ச உணர்வு குறைகிறது. 

யோகர்ட்டில் மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் இருப்பதால் நரம்புகளின் செயல்பாடு அதிகரித்து, ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, உள்ளங்கை மற்றும் பாதங்களில் கூச்ச உணர்வு குறைகிறது.

* தினமும் ஒரு கிண்ணம் தயிர் அல்லது யோகர்ட் உட்கொள்வதால் கூச்ச உணர்வு குறைவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

பாத மசாஜ்:

பாத மசாஜ்:

கூச்ச உணர்வை குறைக்க மசாஜ் சிகிச்சை ஒரு தரமான நிரூபிக்கப்பட்ட சிகிச்சையாகும். 

தொடர்ச்சியாக உண்டாகும் கூச்ச உணர்வை குறைக்க, கைகளையும் கால்களையும் மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும். 

மசாஜ் செய்வதால் நரம்புகள் ஊக்குவிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் அதிகரித்து கூச்ச உணர்வு குறைகிறது.

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. இரத்த ஓட்டத்தை செம்மைப் படுத்தும். 

இலவங்கம் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அது மட்டுமல்ல மூளையின் நினைவுப் பெட்டகத்தை நன்கு பணி புரிய வைக்குமாம். உடல் கொழுப்பைக் குறைக்குமாம். 

கூச்ச உணர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு இலவங்கப்பட்டை சிறந்த தீர்வைத் தருகிறது. இலவங்கப் பட்டையில் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை உள்ளன. 

இவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூச்ச உணர்வை குறைக்கிறது. மரத்துப் போகும் உணர்வும் இதனால் குறைகிறது.

* ஒரு பாத்திரத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.

* அதில் ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும்.

* இதனை நன்றாக கலக்கவும்.

* இந்த நீரை ஒரு நாளில் இரண்டு முறை பருகவும்.

* இதனால் பரேஸ்டீசியா கட்டுப்படுத்தப்படுகிறது.

Tags:
Privacy and cookie settings