கடுமையான வேலைகளை செய்த முன்னோர்கள் யாத்திரைகளுக்கு நடந்து தான் சென்றார்கள். உடலை வருத்திக் கொள்ளாமல் அவர்கள் எந்த வேலையையும் செய்ததில்லை.
எல்லாமே நவீனம் தான். உணவு முறையிலும் நவீனம், வாழ்க்கை வாழ்வதிலும் நவீனம் பணியிலும் நவீனம் என்று எல் லாமே நவீனம் தான்.
உலகமே கணினி மயம் தான். ஆனால் என்ன பயன் பெருகி வரும் நோயும், நிம்மதியற்ற வாழ்க்கைச் சூழலும் தவிர.
நீண்ட நேரம் அமா்ந்து வேலை செய்பவா்கள் அவா்களுடைய கால்கள், பாதங்கள் மற்றும் கணுக்கால்கள் போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படும்.
அது மிகவும் இயல்பான ஒன்று. ஆனால் வீங்கிய கணுக்கால்கள் மற்றும் வீங்கிய கால்களில் மற்ற அறிகுறிகள் தொிந்தால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்யமான உடலை கொண்டிருப்பவர்கள் கூட பயணங்களின் போது படும் அவஸ்தைகளில் ஒன்று பாதத்தில் உண்டாகும் வீக்கம்.
இது அடிக்கடி வருகிறது என்று அலட்சியப்படுத்தாமல் இத்தகைய பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரை அணுகுவதே நல்லது.
நமது பாதங்கள் அல்லது கால்கள் வீக்கம் அடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை பாா்க்கலாம்.
பாதத்தில் வீக்கம் ஏன்?
இயல்பாகவே நீண்ட நேரம் கால்களை அசைக்காமல் (நின்று/உட்கார்ந்து/ பயணத்தில்) இருக்கும் போது வீக்கம் உண்டாவது சாதாரணமானது.
இந்த வீக்கம் அடுத்த நாள் சரியாகி விடும். அதனால் இவர்கள் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் கால்களில் அதிக நீர்த்தேக்கம் ஏற்படும் போது வீக்கம் வரும்.
நீண்ட நேரம் நின்றிருந்தாலோ அல்லது ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருந்தாலோ இந்த வீக்கம் உண்டாக வாய்ப்புண்டு.
காரணம் இவர்கள் கால்களை அசைக்காமல் ஒரே இடத்தில் வைக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் குறைகிறது.
கால்களைத் தொங்க விட்டு அமருபவர்களுக்கு உட்கார்ந்த சில மணித்துளிகளில் வீக்கம் உண்டாவதும்
தொடர்ந்து இத்தகைய பிரச்னைகள் இருப்பதும் அவரது உடலில் ஏதோ ஒரு குறைபாட்டின் தொடக்கம் என்று சொல்லலாம்.
எப்போதாவது என்றால் பரவாயில்லை. ஆனால் அவ்வப்போது இப்படியான வீக்கத்தைச் சந்தித்தால் நிச்சயம் ஒரு பரிசோதனை அவசியம்.
நீரிழிவு அதிகமிருப்பவர்கள், இதய நோய், வலுவிழந்த இதயம், சோர்வு அடிக் கடி சிறுநீர் கழித்தல், உடல் பருமன் பிரச்னை போன்றவற்றால்
பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை உண்டாகும். சிலருக்கு கால்களில் நரம்புகள் சுருட்டியிரு க்கும்.
அதனாலும் வீக்கம் ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு மரபு ரீதியாகவும் வருவதற்கு வாய்ப்புண்டு.
மருந்துகளினால் ஏற்படும் எதிா்வினை
அவற்றினுடைய பக்க விளைவுகளின் காரணமாக நமது பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்.
மருந்துகளின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயம் நமக்குத் தோன்றினால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.
நாம் எடுக்கும் மருந்து மாத்திரைகளில் தேவையான மாற்றங்களை மருத்துவா் பாிந்துரை செய்வாா்.
கா்ப்ப கால பிரச்சினைகள்
ஆனால் அவா்களுக்கு திடீரென்று கால்கள் வீங்கினால் அல்லது வீக்கம் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக வயிற்றுவலி, தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றின் காரணமாக கால்கள் வீங்கினால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
ஒரு சில கா்ப்பிணி பெண்களுக்கு இளம்பேற்று அல்லது கா்ப்பகால குளிா் காய்ச்சல் (preeclampsia) ஏற்படுவதன் காரணமாகவும் கால்கள் வீங்கும். அதற்கு உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
பாதங்கள் அல்லது கணுக்கால்களில் காயங்கள்
நமது கணுக்கால்களில் சுளுக்கு அல்லது அவற்றின் தசைநாா்களில் காயங்கள் ஏற்பட்டால் வீக்கம் ஏற்படும்.
ஏனெனில் கணுக்கால் தசைநாா்களில் ஏற்படும் திாிபு அல்லது காயங்கள், கணுக்கால்களில் அளவுக்கு அதிகமாக நெருக்கடி கொடுப்பதால், அந்த பகுதிகளில் வீக்கம் ஏற்படும்.
போதுமான சிரை அல்லது இரத்த நாளங்கள் (Venous) இல்லாமை
நமது உடலில் போதுமான அளவு சிரை அல்லது இரத்த நாளங்கள் இல்லாமல் போனால், உடனடியாக கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும்.
அதாவது போதுமான அளவு சிரை அல்லது இரத்த நாளங்கள் இல்லை என்றால், நரம்புகள் மூலம் கால்களில் இருந்து இதயத்துக்கு இரத்தம் சீராகப் பாய்வதில் பிரச்சினை ஏற்படும். அதனால் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும்.
நோய்த் தொற்று
அவா்களின் பாதங்களில் நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. அந்த நோய்த் தொற்றுகள் அவா்களின் கணுக்கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
இரத்தம் உறைதல்
கால்களில் உள்ள நரம்புகளில் இரத்தம் உறைந்தால், அது கால்களில் இருந்து இதயத்திற்கும், இதயத்திலிருந்து கால்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுத்து விடும்.
அதனால் கணுக்கால்களிலும், பாதங்களிலும் வீக்கம் ஏற்படும். கால்களில் அதிக வலியுடன் கூடிய நிறமாற்றம் இருந்தால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.
இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்கள்
ஒருவருக்கு மாலை நேரத்தில் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படுகிறது என்றால், அவருக்கு வலது பக்க இதயம் செயல் இழப்பதன் காரணமாக,
உப்பையும், தண்ணீரையும் தக்க வைப்பதற்காக கால்கள் வீங்குகின்றன என்று பொருள்.
அதே நேரத்தில் கணுக்கால்களில் வீக்கமும் அதோடு மயக்கம், பசி எடுக்காமல் இருத்தல், உடல் பருமன் அதிகாித்தல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
கணுக்கால்கள் அல்லது பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது?
கணுக்கால்களில் உள்ள வீக்கத்தின் மேல் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். கணுக்கால்களில் உள்ள வீக்கத்தைச் சுற்றி துணியால் கட்டலாம்.
அமரும் போது கால்களைத் தொங்கவிடாமல், முக்காலி அல்லது நாற்காலி அல்லது தலையணை மீது உயா்த்தி வைக்கலாம்.
சா்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் வீக்கம் ஏற்பட்டால், கொப்புளம் அல்லது புண்கள் வராமல் தினமும் கவனமுடன் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
நரம்பில் பாதிப்பு இருந்தால், பாதங்களில் இருக்கும் வலியுணா்வை மழுங்கடிக்கும். அதனால் பாதங்களில் பிரச்சினைகள் மிக விரைவாக அதிகாிக்கும்.
ஆழமான நரம்பு இரத்த உறைவு (deep vein thrombosis (DVT) இருப்பது தொிந்தால், மருத்துவரை சந்திப்பது நல்லது. அவா் உறைந்த இரத்தத்தை சாி செய்வாா்.
கணுக்கால்களில் வீக்கமும், வலியும் அதிகமாக இருந்து, அதற்கு கொடுக்கப்படும் வீட்டு வைத்தியம் பலனளிக்கவில்லை என்றால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
Thanks for Your Comments