நாட்டில் கொரோனா பரவலுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஒரு ஆண்டுக்கும் மேலாகி விட்டது. ஆன்லைனில் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வாயிலாகவும் கற்பித்தல் நடைபெறுகிறது.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தர வேண்டும் என்று அறிவுறுத்தி, அதன் வாயிலாக ஆன்லைனில் கற்பிக்கின்றன.
ஜூம், ஜியோ மீட் போன்ற செயலிகள் மூலம் ஆன்லைனில் தினசரி தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுகின்றன.
ஆனலைன் வகுப்புகளில் பங்குபெற ஸ்மார்ட்போன் தேவை. கிராமங்களில் ஏழைகளிடம் இது போன்ற ஸ்மார்ட் போன் வாங்க வசதி இருப்பதில்லை.
இதனால் பல மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. `மொபைல் சிக்னலுக்கே மாணவியின் 5 கி.மீ பயணம்; பின் ஆன்லைன் வகுப்பு!'- இதுவும் `டிஜிட்டல் இந்தியா' தான்
அப்படி ஒரு நிலையில் இருக்கும் மாணவி தான், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த துள்சி குமாரி. ஸ்மார்ட்போன் இல்லாததால் அவரால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை.
இதற்காக மாம்பழங்களை வாங்கி ஜாம்ஷெட்பூர் தெருக்களில் விற்பனை செய்து வந்தார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்து போன் வாங்க திட்டமிட்டார்.
அவர் தெருக்களில் மாம்பழம் விற்பனை செய்வதை உள்ளூர் டிவி சேனல் நிருபர் ஒருவர் பேட்டி எடுத்து வெளியிட்டார்.
அதில் ஆன்லைன் கிளாசில் கலந்து கொள்ள ஸ்மார்ட் போன் இல்லை. எனவே மாம்பழம் விற்று பணம் சேமித்து அதில் கிடைக்கும் பணத்தில் போன் வாங்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
இதனை மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அமேயா ஹேடே என்பவர் பார்த்தார். உடனே அச்சிறுமிக்கு உதவ வேண்டும் என்று நினைத்தார்.
புரதம் கொண்ட சோயா கிரேவி செய்வது எப்படி?
அச்சிறுமியின் தந்தையின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று அதில் ரூ.1.20 லட்சத்தை டெபாசிட் செய்து விட்டு ஒரு டஜன் மாம்பழம் அனுப்பும்படி சிறுமியிடம் கேட்டுக் கொண்டார்.
இப்போது போன் வாங்கி விட்டேன். இனி ஆன்லைன் வகுப்புகளில் என்னால் கலந்து கொள்ள முடியும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வெங்காயம் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?
ஒரு டஜன் மாம்பழத்தை 1.20 லட்சம் ரூபாயிக்கு வாங்கிய அமேயா இது குறித்து கூறுகையில், ``சிறுமி பணம் இல்லாமல் படிக்க கஷ்டப்படுவதாக கேள்விப்பட்டு மிகவும் வருத்தமாக இருந்தது.
அவளது இந்த நிலைக்கு அவள் காரணமில்லை. எனவே தான் அவளிடம் மாம்பழம் வாங்கினேன்" என்று தெரிவித்தார்.
Thanks for Your Comments