கொரோனா இரண்டாவது அலை மிகவும் மோசமாகி உள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.
அதன்படி 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7 ஆம் தேதி கையெழுத்திட்டிருந்தார். அதில் இந்த திட்டமும் ஒன்று. முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்பட்டு விட்டது.
இரண்டாவது தவணை ரூ 2000 வழங்குவது குறித்து நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் கேஸ்கள் குறைந்ததால் மேலும் ஒரு வாரத்திற்கு வரும் 7-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அறிவித்தது.
எடுக்க எடுக்க தங்கம்... காங்கோ தங்க மலை.. அள்ளிச் செல்லும் மக்கள் !
அதற்கான டோக்கன்களை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வழங்குகிறார்கள். ஜூன் 4 ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும்.
ஜூன் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நாள், நேரத்திற்கு சென்று 13 மளிகை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
நிர்வாக காரணங்களுக்காக துவரம் பருப்பு மட்டும் வரும் 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கும்.
கோதுமை மாவு- 1 கிலோ
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
சர்க்கரை- 500 கிராம்
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம்
கடலை பருப்பு- 250 கிராம்
கடுகு- 100 கிராம்
சீரகம்- 100 கிராம்
மஞ்சள் தூள்- 100 கிராம்
மிளகாய் தூள்- 100 கிராம்
குளியல் சோப்பு (125 கிராம்)- 1
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1
Thanks for Your Comments