ஜூன் 23-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து துபாய்க்கு மீண்டும் பயணிகள் விமானம் தொடங்குகிறது.
எமிரேட்ஸின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயண நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா உள்ளவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கிகரிக்கப்பட்ட
தடுப்பூசியை 2 முறை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே ஜூன் 23 முதல் துபாய்க்கு பயணிக்க முடியும்.
வைரம் பற்றிய நாம் அறியா விஷயங்கள் !
மேலும், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ்,QR coded மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
சிறுநீர் கழிக்கக்கூட நேரம் கொடுக்காத பள்ளிகள் !
பிசிஆர் பரிசோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரிசோதனை முடிவு 24 மணி நேரத்துக்குள் குறுஞ்செய்தியாக உங்க மொபைலுக்கு வந்து சேரும். ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்களுக்கும், தூதர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. timesofindia
Thanks for Your Comments