ஹிட்லர் மீசை போல உள்ளதாக இணையத்தில் கிண்டலுக்கு உள்ளான அமேசான் லோகோவை அந்நிறுவனம் மாற்றியுள்ளது
ஜெஃப் 1999ம் ஆண்டு, "அமேசான். காம் நிறுவனம் வெற்றிகரமான நிறுவனமாக இருக்குமென எந்த உத்தரவாதமும் இல்லை.
நாங்கள் செய்ய முயல்வது சிக்கலான ஒரு விஷயம்." என்று கூறி இருக்கிறார். அதுவும் நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு.
ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அமெசான் நிறுவனம் இன்று உலகின் முன்னோடி மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது.
இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அமேசானின் ஆண்டு வருமானமும் அனைவரையும் மலைக்க வைக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் விற்பனை 275.06 பில்லியன் டாலராக இருக்கும் என்றும், 2020 இறுதிக்குள் அதன் வருமானம் 320 பில்லியன் டாலராக இருக்குமென்றும் கணிக்கப்படுகிறது.
பல தரப்பட்ட விஷயங்களை அமேசானிற்குள் கொண்டு வந்தது தான், அதன் வெற்றிக்கு காரணம்,
அதாவது வீடியோ ஸ்ட்ரீமிங், ப்ரைம் ஆடியோ, அண்மையில் கொண்டுவரப்பட்ட காய்கறி விற்பனை என இந்த நிறுவனம் பல துறைகளில் கால்பதித்து வெற்றி கண்டிருக்கிறது.
வழக்கமான ஸ்மைலிங் சிம்பலுக்கு மேல் ரிப்பன் போல் ஒரு லோகோவை அறிமுகம் செய்தது.
ஆனால் அந்த ரிப்பனை பார்க்கும் போது ஹிட்லரின் மீசையை போல இருப்பதாக இணையத்தில் பலரும் பதிவிட்டனர்.
தொடர்ந்து கிண்டலுக்கு உள்ளானதை அடுத்து தனது புதிய லோகோவை உடனடியாக மாற்றியுள்ளது அமேசான். ரிப்பனுக்கு பதிலாக வேறு ஒரு மாடலை அது மாற்றியுள்ளது.
இந்த புது ஐகான் குறித்து சிஎன்என்க்கு பேசிய அமேசான் செய்தி தொடர்பாளர் ''வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசியில்,
எங்கள் பார்சலை அவர்கள் வீட்டு வாசலில் பார்க்கும் போது அவர்களுக்கு அது உற்சாகத்தை கொடுப்பதாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய மிந்த்ரா லோகோவும் தன்னுடைய ஐகானை மாற்றியது குறிப்பிடத்தக்கது
Thanks for Your Comments