ஒருவரின் ரத்தத்தில் எவ்வளவு கிரியேட்டினின் உள்ளது என்பதைப் பொருத்து அவருடைய சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயக்க புரதச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. அளவுக்கு அதிகமான புரதச்சத்து கிரியேட்டினின் அளவை அதிகரிக்கச் செய்து விடும்.
எனவே, இறைச்சி, சில வகையான பால் பொருட்களைத் தவிர்ப்பது கிரியேட்டினின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். ஆரோக்கியமான சிறுநீரகம் இந்த கிரியாட்டினை வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும்.
ஒருவரின் ரத்தத்தில் எவ்வளவு கிரியேட்டினின் உள்ளது என்பதைப் பொருத்து அவருடைய சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
ஆனால், இரவு தூங்கும் போது சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையாகவே உடலில் கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்ளும். சிறுநீரகம் தொய்வடைந்த நிலையில் இரவு நேரங்களில் சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.
இது தொடர்ந்து இருந்தால், இது சிறுநீரகத்தின் பலவீனமா அல்லது புரோஸ்டேட் சுரப்பியின் செயல்பாடுகளின் மாறுதலா என்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
குறிப்பாக, ஆல்புமின் மற்றும் கிரியாட்டின் அளவு அதிகமாகக் கூடாது. கிரியாட்டின் அளவு 1.5 என்ற அளவுக்கு மேல் காணப்பட்டால் சிறுநீரகம் ஏறக்குறைய 50 சதவீத அளவுக்கு பாதிப்படைந்து விட்டது எனலாம்.
பொதுவாக ஆண்களுக்கு 0.6 முதல் 1.2 mg/dL என்ற அளவிலும், பெண்களுக்கு 0.5 முதல் 1.1 mg/dL என்ற அளவிலும், இளம் வயதினருக்கு 0.5 முதல் 1.0 mg/dL என்ற அளவிலும், குழந்தைகளுக்கு 0.3 முதல் 0.7 mg/dL என்ற அளவிலும் கிரியேட்டினின் அளவு இருக்கலாம்.
இதைத் தாண்டினால் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். உடலில் கிரியேட்டினின் இருப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
அளவுக்கு அதிகமான புரதச்சத்து கிரியேட்டினின் அளவை அதிகரிக்கச் செய்து விடும்.
எனவே, இறைச்சி, சில வகையான பால் பொருட்களைத் தவிர்ப்பது கிரியேட்டினின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நார்ச்சத்து மிக்க உணவுகள் செரிமானத்துக்கு உதவியாக இருக்கக் கூடியவை.
தொடர்ந்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து வருவது கிரியேட்டினின் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு, பயிறு வகைகளில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிக அளவில் உள்ளன. குறிப்பாக உப்பில் உள்ள சோடியம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
Thanks for Your Comments