தமிழ்நாட்டை நெருங்கும் டெல்டா பிளஸ் கொரோனா.. உஷார் மக்களே !

0

கொரோனா 2 வது அலையின் போது உருமாற்றம் அடைந்த, ‘டெல்டா’ வகை வைரஸ், மிக வேகமாக பரவியது. 

தமிழ்நாட்டை நெருங்கும் டெல்டா பிளஸ் கொரோனா.. உஷார் மக்களே !
இந்த வைரஸ், டெல்டா பிளஸ் அல்லது ஏஒய்.01 என்ற வைரசாக மேலும் உருமாற்றம் அடைந்து, 3வது அலையை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சமீபத்தில் தெரிவித்தனர்.

இந்தியாவில் இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா காரணமாக மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது. 

இதே வகையான கொரோனா தொற்று இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. 

உலக அளவில் டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உங்க வீட்ல மிக்ஸி இருக்கா... அப்ப இத கண்டிப்பா படிங்க ! 

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்ததில் சென்னையில் ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகத்தில் கொரோன வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனாவில் இருந்து புதிய வகை வைரஸ் முளைக்கிறது. 

இதனால் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். பல நாடுகளில் டெல்டா வகை வைரஸ் தாக்கி வருகின்றது.

சுவையான டொமேட்டோ சாஸ் செய்வது எப்படி?

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதால் 

தமிழ்நாட்டை நெருங்கும் டெல்டா பிளஸ் கொரோனா

அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் மட்டும் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்த வித புதிய வகை வைரஸும் இல்லை என்று பொது மக்கள் சந்தோஷத்தில் இருந்தனர். 

ஆனால் இப்பொழுது சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை தாக்கியது உறுதியாகியுள்ளது என்று மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings