கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? Dr . கீதா ஹெக்டே !

0

சமூக ஊடங்களிலும், எது நிஜம், எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு ஏதேதோ செய்திகள் உலவுகின்றன. இவற்றால், ‘இந்த தடுப்பூசி பாதுகாப்பானதா? 

கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
இதை போட்டுக் கொள்வதால் கொரோனா தொற்றில் இருந்து நம்மால் நிஜமாகவே தப்ப முடியுமா?

இதன் பக்க விளைவுகள் என்ன?

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு பிறகு, 28 நாட்கள் கழித்து இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளும் வரை அலுவலகத்தில் இருந்து விடுப்பு பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்குமா?’ என பல கேள்விகள் எழுந்துள்ளன.

இது போன்ற கேள்விகளுள் முக்கியமான சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், மும்பை KEM மருத்துவமனையைச் சேர்ந்த Dr. கீதா ஹெக்டே.

கோவாக்ஸின், கோவிஷீல்டு இவை இரண்டிற்கும் மத்தியில் என்ன வித்தியாசம்?

கோவாக்ஸின், கோவிஷீல்டு இவை இரண்டிற்கும் மத்தியில் என்ன வித்தியாசம்?

கோவாக்ஸின், பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (ICMR) இணைந்து தயாரித்த கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஆகும். 

நம் நாட்டில் தயாரான இந்த ‘சுதேசி’ தடுப்பூசி, கொரோனா தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும் ‘பிறபொருளெதிரி’ (எ) ஆன்டிபாடி (antibodies) பொருட்களை நம் உடலில் தோற்றுவிக்கும் தன்மை உடையது.

கோவிஷீல்டு தடுப்பூசி, ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் ஆஸ்ட்ராசெனெகா இணைந்து உருவாக்கிய மருந்தின் இந்திய வடிவமாகும். ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம் இதை ‘Kovishield’ என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கிறது. 

இந்த தடுப்பூசி சாதாரண சளியை தோற்றுவிக்கும் ‘அடினோவைரஸ்’ கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுமே சம ஆற்றல் உடையவைதாம். 

மேலும், இவை இரண்டில் எதை போட்டுக் கொண்டாலும், முதலாம் டோஸ், இரண்டாம் டோஸ் என்று இரு வேறு டோஸ்களாக போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு டோஸ்களுக்கும் இடையில் 28 நாள் கால இடைவெளி இருப்பது அவசியம் ஆகும்.

(nextPage)

தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய மூத்த குடிமக்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு என்ன? 89 மற்றும் 90 வயதுடைய எனது வயதான பெற்றோர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா?

தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய வயது

ஆம், நிச்சயம் அவர்களுக்கு தடுப்பூசி போடலாம், ஆனால் அதற்காக சில விதிகளை பின்பற்ற வேண்டும். தற்சமயம் இரண்டு பிரிவுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரப்படுகிறது.

முதல் பிரிவு – 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்;

இரண்டாவது பிரிவு – ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட, அல்லது சில உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்ட 46 முதல் 59 வயது வரையிலானவர்கள்.

ஆனால் இதற்காக, அவர்கள் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, அல்லது இவை இரண்டிற்கு சமமான, 

இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்ட புகைப்பட அடையாள அட்டையுடன் தடுப்பூசி மையத்திற்கு வர வேண்டும். 

நீங்கள் 46 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து, உங்களுக்கு இணை நோய் எனப்படும் கோ-மார்பிடிட்டி (co-morbidity) அல்லது வேறேதேனும் தீவிரமான நோய் இருக்குமானால், நீங்கள் ஒரு மருத்துவ சான்றிதழையும் பெற்று வருவது அவசியம் ஆகும்.

‘ஐ.டி.பி’, அதாவது, ‘இடியோபாதிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புரா’ (idiopathic Thrombocytopenic Purpura) நோயால் பாதிக்கப் பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா?

‘இடியோபாதிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புரா’ (idiopathic Thrombocytopenic Purpura) நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா?

ஆம், அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன், அவரது நோய் மற்றும் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய சரியான தகவல்களை தடுப்பூசி செலுத்தும் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம் ஆகும்.

(nextPage)

இந்த தடுப்பூசி இதய நோயாளிகளுக்கு (heart/cardiac patients) பாதுகாப்பானதா?

தடுப்பூசி இதய நோயாளிகளுக்கு (heart/cardiac patients) பாதுகாப்பானதா?

ஆம், இது அவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது, ஆனால் அவர்கள் 46 முதல் 59 வயதிற்குள் இருப்பவரெனில் இருந்தால், முதலில் தடுப்பூசி செலுத்தும் மருத்துவரிடம் இணை நோயுற்றதற்கான ‘கோ-மார்பிடிட்டி’ சான்றிதழைக் காட்ட வேண்டும்.

குறைவான பிளேட்லெட் (platelet) எண்ணிக்கை உள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடலாமா?

குறைவான பிளேட்லெட் (platelet) உள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடலாமா?

இல்லை. பிளேட்லெட்டுகள் பொதுவாக இருக்கும் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளவர்களுக்கு, இந்த தடுப்பூசியை போட முடியாது; அவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். 

அவர்களது பிளேட்லெட் எண்ணிக்கை உயர்ந்து பொதுவாக இருக்கும் எண்ணிக்கையை அடையும் போது, ​​அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

குழந்தை பெற்றுக் கொள்ளப் போகும், அல்லது ‘குழந்தை பெற்றுக் கொள்ளலாம்’ என்ற எண்ணமுடைய தம்பதிகள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாமா?

தம்பதிகள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாமா?

இப்படிப்பட்ட தம்பதியரில் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் ஆண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த பெண் கர்ப்பமாக இருந்தாலோ 

அல்லது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் கர்ப்பம் தரிக்கும் எண்ணமுடையவராக இருந்தாலோ, அந்த பெண் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளக் கூடாது.

தற்சமயம் கர்ப்பமுறுவதை பற்றி யோசிக்கவில்லை என்றாலோ, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கலாம் என்ற எண்ணமுடையவராக இருந்தாலோ, பெண் கண்டிப்பாக தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

(nextPage)

நீரிழிவு நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாதா?

நீரிழிவு நோயாளிகளுக்கு  தடுப்பூசி போடலாமா?

அப்படி இல்லை. மாறாக, மேற்கூறிய உடல்நலக் குறைவுகள் மற்றும் நோய்கள் உடையவர் 46 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், மிக அவசியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியாவில் தொடங்கியதாகத் தெரிகிறது; இந்த தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

தற்போதைய சூழ்நிலையில் இந்த தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த நோயிலிருந்து பாதுகாக்க நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி பலப்படுத்தும்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தடுப்பூசி நோய்த்தொற்றில் இருந்து முழுவதுமாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவரை தடுக்காது, 

ஆனால் இது கொரோனாவால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளில் இருந்து தடுப்பூசி பெற்றுக் கொண்டவரை பாதுகாக்கும். தடுப்பூசி போட்ட பிறகும், கோவிட்-19 தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிகளையும் நாம் பின்பற்ற வேண்டும் .

அதாவது முகமூடி அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் , கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் தளர்வின்றி பின்பற்ற வேண்டும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (kidney transplant) செய்து கொண்ட நோயாளிகளுக்கும் இந்த தடுப்பூசி போடப்படுமா?

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (kidney transplant) நோயாளிகளுக்கு  தடுப்பூசி போடலாமா?

ஆமாம், அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் – ஆனால் டாக்டர் அவர்களுக்கு அளித்த மருத்துவச் சான்றிதழை அவர்களுடன் எடுத்துச் செல்வது அவசியம் ஆகும்.

இவ்வளவு குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை தானா?

ஆம், இவை முற்றிலும் பாதுகாப்பானது. தடுப்பூசி மிகக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டது என்பது உண்மை தான், ஆனால் அதன் பின்னால் நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு உள்ளது. 

தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்த பின்னரே, அது அங்கீகரிக்கப் பட்டுள்ளது. 

உரிய ஒழுங்கு முறை அமைப்புகளால் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அந்த அமைப்புகள் ஒப்புதல் அளித்த பின்னரே இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

(nextPage)

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஏதாவது பக்க விளைவுகள் உண்டா?

தடுப்பூசி போட்ட பிறகு பக்க விளைவுகள் உண்டா?

தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்குப் பிறகு கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை. ஆனால், பொதுவாக எந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டாலும் வருவது போலவே இந்த தடுப்பூசியும் லேசான காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். 

இப்படி நேர்ந்தால் பயப்படாமல், தென்படும் அறிகுறிக்கான சிம்ப்டோமாட்டிக் (symptomatic) சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகள் தவிர்த்து வேறு ஏதேனும் தீவிர பிரச்சினை அல்லது கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டாலோ, அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட அறிகுறியின் தீவிரம் குறையவில்லை என்றாலோ, நீங்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு 

அல்லது உங்கள் மருத்துவரிடம் செல்வது மிகவும் அவசியம். அத்துடன் தடுப்பூசி வழங்குநரை உடனடியாகத் தொடர்புகொண்டு இது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

தடுப்பூசிக்கு எத்தனை நாட்களுக்குப் பிறகு ‘ஆன்டிபாடி’கள் (antibodies) உருவாகும்?

ஆன்டிபாடி’கள் (antibodies) உருவாகும்?

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டதில் இருந்து 14 நாட்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகள் குறிப்பிட்ட அளவில் உருவாகும்.

இப்போது இந்தியாவில் பயன்பாட்டில் இரண்டு தடுப்பூசிகள் உள்ளன; இதனால் எந்த தடுப்பூசியை நாம் பெற விரும்புகிறோமோ அதையே நாம் போட்டுக் கொள்ளும் வசதி உள்ளதா?

முதல் டோஸ் ஒரு தடுப்பூசி பின்னர் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளும் போது வேறு ‘பிராண்ட்’ தடுப்பூசி என்று மாற்றிக் கொள்ள முடியுமா?

இல்லை, தற்சமயம் இந்தியாவில் இந்த வசதி இல்லை. நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்து, 

குறிப்பிட்ட மையத்திற்கு தடுப்பூசியை போட்டுக் கொள்ள செல்லும் போது, ​​அந்த மையத்தில் எந்த தடுப்பூசி உள்ளதோ, அதையே நீங்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.

இரண்டு டோஸ்களுக்கும் ஒரே பிராண்டின் தடுப்பூசியை தான் நீங்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுமா?

இல்லை, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நோயிலிருந்து குணமடைந்த பின்னரே இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும்.

(nextPage)

பதிவு செய்து கொள்ளாமல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியுமா?

பதிவு செய்யாமல் கொரோனா தடுப்பூசி போட முடியுமா?

இல்லை, தடுப்பூசிக்கான பதிவு கட்டாயமாகும். பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டும் தான் தடுப்பூசியை அவர்கள் போட்டுக் கொள்ளும் தேதி மற்றும் நேரம் தெரிவிக்கப்படும்.

இருப்பினும், இப்போது பல மையங்கள் ‘வாக்-இன்’ பதிவு, அதாவது, மையத்திற்கு நேரில் சென்று அப்போதே பதிவு செய்து கொள்ளும் வசதியை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

என்னுடைய தடுப்பூசி டோஸ் முழுமை அடைந்ததா (இரண்டு டோஸ்களும் போடப்பட்டு) என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?

தடுப்பூசி டோஸ் முழுமை அடைந்ததாஎன்பதை அறிந்து கொள்ள

நீங்கள் பதிவு செய்யும் போது பகிர்ந்து கொள்ளும் உங்கள் செல்பேசி எண்ணுக்கு, உங்கள் கோவிட் தடுப்பூசியின் முழு அட்டவணையும் முடிந்த பிறகு, 

அதை உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தி எஸ்எம்எஸ் மூலமாக உங்களுக்கு கிடைக்கும். பதிவு செய்யப்பட்ட எண்ணில் QR அடிப்படையிலான சான்றிதழையும் நீங்கள் பெறுவீர்கள்.

மேற்கொண்டு உங்களுக்கு தேவைப்படும், கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான சில பொதுவான கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். (https://www.mygov.in/hi/covid-19)

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான வேறு ஏதேனும் குறிப்பிட்ட கேள்விகள் இருந்தால், குறிப்பாக உங்கள் உடல் நிலை குறித்த தகவல் தேவைப்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்..... பிபிசி இந்தி

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings