உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் இழந்து விட்டாலோ அல்லது தவறான இடத்தில் வைத்து தொலைத்து விட்டாலோ கவலைப்பட வேண்டாம்.
இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரபூர்வ வலைத்தளம் அல்லது mAadhaar செயலி மூலம் ஆன்லைனில் ஆதார் அட்டையை இப்போது எளிதாக பெறலாம்.
UIDAI-இன் புதிய விதிமுறைகளின்படி, ஆதார் அட்டைதாரர்கள் ரீபிரிண்ட்க்கு ஆர்டர் செய்வதன் மூலம் அதை ஆன்லைனில் பெறலாம்.
ஆதார் அட்டை இந்தியர்களுக்கு முக்கியமான அடையாள ஆதாரமாக செயல்படுகிறது. இந்த அட்டை 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண், பயோமெட்ரிக் மற்றும் புள்ளி விவர தரவுகளைப் பயன்படுத்துகிறது.
ஆதார் அட்டையை ஆன்லைனில் ரீப்ரின்ட் செய்ய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்:
2. யூசர்கள் 'ஆர்டர் ஆதார் மறுபதிப்பு' (Order Aadhaar Reprint) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
3. 'ஆர்டர் ஆதார் மறுபதிப்பு' என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் ஆதார் எண் (UID) அல்லது சேர்க்கை எண் (EID)ஐ உள்ளிடவும்.
யூசர்கள் ஆதார் அட்டை எண் (UID), சேர்க்கை எண் (EID), முழு பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
ஒருவரின் மொபைல் எண்ணை இது போன்ற ஒரு பொது டொமைனில் சமர்ப்பிக்க விரும்பவில்லை என்றால்,
உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் உங்கள் ஆதார் அட்டையைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
4. இப்போது ஆதார் அட்டைதாரர்கள் கேப்ட்சாவை உள்ளிட வேண்டிய இணையதளத்தில் ஒரு விருப்பம் தோன்றும். CAPTCHA நிரப்பப்பட்டதும், 'Send OTP' அல்லது 'Enter OTP 'விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
5. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இது mAadhaar செயலியில் பிரதிபலிக்கும்.
7. பின்னர் மேக் பேமென்ட் என்ற விருப்பத்தை சொடுக்கி, உங்கள் ஆன்லைன் கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து தொகையை செலுத்த வேண்டும்.
8. அதில் நீங்கள் ரூ.50 செலுத்துமாறு கேட்கப்படுவீர்கள்.
9. கட்டணம் செலுத்திய பிறகு, உங்கள் சேவை கோரிக்கை எண் (SRN) உள்ள ஒப்புதல் சீட்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
10. கட்டணம் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் ஆதார் அட்டை அச்சிடப்பட்டு 15 நாட்களுக்குள் ஸ்பீட் போஸ்ட் வழியாக உங்களுக்கு அனுப்பப்படும்.
ஆதார் எண்ணை மீட்டெடுக்க மாற்று மொபைல் எண்ணையும் பயன்படுத்தலாம்:
அட்டைதாரர்கள் தங்கள் மொபைல் எண்ணை பிற புள்ளிவிவர தரவு புதுப்பிப்புகளுடன் அல்லது இல்லாமல் புதுப்பிக்க ரூ.50 செலுத்த வேண்டும்.
பதிவு செய்யப்படாத அல்லது மாற்று மொபைல் எண்ணைப் பயன்படுத்தியும் யூசர்கள் ஆதார் மறுபதிப்புக்கு உத்தரவிடலாம்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
13 மொழிகளில் 35 ஆன்லைன் சேவைகளை வழங்கும் mAadhaar:
mAadhaar என்பது UIDAI இன் ஒருங்கிணைந்த செயலியாகும். இது 13 மொழிகளில் 35 ஆன்லைன் ஆதார் சேவைகளை வழங்குகிறது.
MAadhaar செயலியை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் eAadhaar, update status, Aadhaar Kendra போன்ற 35 க்கும் மேற்பட்ட ஆதார் சேவைகளை ஒருவர் பெற முடியும் என்று ஒரு ட்வீட்டில் UIDAI குறிப்பிட்டுள்ளது.
MAadhaar பயன்பாட்டின் பயன்கள்:
ஆதார் ரீபிரிண்ட்க்கு ஆர்டர் செய்வதைத் தவிர, குடிமக்கள் தங்கள் அடையாளச் சான்றைக் காட்ட வேண்டியிருக்கும் போது, ஆதார் ஆஃப்லைன் பயன்முறையில் காண்பிக்க mAadhaar ஐப் பயன்படுத்தலாம்.
ஒரு நபர் ஒரு மொபைல் மூலம் ஐந்து உறுப்பினர்களின் ஆதாரை mAadhaar ஐப் பயன்படுத்தி நிர்வகிக்க முடியும். மேலும் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி அதைப் பாதுகாக்கவும் முடியும்.
பதிவு செய்தல் மையத்தைக் கண்டறிய யூசருக்கு இது உதவுகிறது. நீங்கள் mAadhaar செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் அந்த செயலியிலேயே ஆதார் அட்டையைப் பதிவிறக்கலாம்.
யூசர்களுக்கு VIDயை உருவாக்க இந்த செயலி உதவுகிறது. புதுப்பிப்பு கோரிக்கை முடிந்ததும் ஆதார் சுயவிவரத்தில் புதுப்பிக்கப்பட்ட தரவைப் பெற ஆதார் sync அம்சம் மக்களுக்கு உதவுகிறது.
UIDAI செயலியில் ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெற SMS அடிப்படையிலான OTP க்கு பதிலாக நேர அடிப்படையிலான OTP ஐப்யும் பயன்படுத்தலாம்.
Thanks for Your Comments