கள்ளகாதல் என்றால் விரலை வெட்டி சாப்பிடும் தண்டனைகள் !

இன்று தினமும் செய்திகளில் பார்க்கும் ஒரு விஷயமாக கள்ளக்காதல் மாறி விட்டது. முந்தைய காலக்கட்டத்தில் அரிதாக காணப்பட்ட இது இப்போது அன்றாடம் சந்திக்கும் பிரச்சினையாக மாறி விட்டது. 

கள்ளகாதல் என்றால் விரலை வெட்டும் தண்டனைகள் !
கணவனிடம் / மனைவியிடம் அன்பு மற்றும் களவியில் இன்பம் கிடைக்காத ஆண்கள் / பெண்கள் ,அந்த இன்பத்தை வேறு ஒருவர் ஆண் / பெண் தரும் போது அது கள்ளக்காதலாக உருவம் எடுக்கிறது. 

சில பேர் பணத்துக்கு போகிறார்கள். சில பேர் உறவுக்காக போகிறார்கள். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக மனைவியை கணவனும்; 

கணவனை மனைவியும் தங்கள் கள்ளக்காதலர் உதவியுடன் கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்யும் அளவிற்கு கள்ளக்காதல் உறவுகள் வக்கிரமாகிப் போனது.

இதை விட, கள்ளக்காதலுக்கு இடையூறு எனக் கருதி, தான் பெற்ற பச்சிளங்குழந்தையை கொல்லும் அளவிற்கு மிக மோசமான பண்பாட்டு சீரழிவை இந்த கள்ளக்காதல் ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்களில், சின்னத்திரை முதல் பெரிய திரை வரை கள்ளக்காதலை வைத்துத் தான் கல்லாக்கட்டி வருகிறது. 

சின்னத்திரையில், காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை வரும் எல்லாத் தொடர்களிலும் கள்ளக்காதலை மையமாக வைத்துத் தான் வருகின்றன. 

கள்ளகாதல் என்றால் விரலை வெட்டி சாப்பிடும் தண்டனைகள் !

அரை மணி நேரம் ஒளிபரப்பும் தொடரில் மூன்று இடைவேளையில் பாதி விளம்பரமும் மீதி கள்ளக்காதலுமாகத் தான் இருக்கிறது.

கடந்த காலத்தைப் போல அல்லாமல் இப்போது இந்த பிரச்சினை அதிகரித்திருக்க காரணம் ஆண், பெண் புரிதல் குறைந்ததும், தவறான வாழ்க்கை முறையும் தான்.

நமது நாட்டு நீதிமன்றமே வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் தாண்டிய உறவில் சம்மதத்துடன் ஈடுபவது தவறில்லை என்று கூறி விட்டது. 

ஆனால் பல நாடுகளில் கள்ளக்காதல் இன்றும் சட்டப்படி குற்றத்திற்குரிய தண்டனையாகத் தான் இருக்கிறது. 

இந்த தண்டனைகள் மிதமானது தொடங்கி கடுமையான தண்டனைகள் வரை அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. 

இந்த பதிவில் கள்ளக்காதலுக்கு பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளில் ஒன்றாக ஸ்விட்சர்லாந்து இருக்கிறது. சுவிட்சர்லாந்து, பல முக்கிய ஐரோப்பிய கலாச்சாரங்களில் கலவையைப் பெற்றுள்ளது, 

அவை சுவிட்சர்லாநந்தின் மொழிகள் மற்றும் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை வழங்கியுள்ளன.

ஸ்விட்சர்லாந்தில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவது பெரிய குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால் அவர்கள் அடுத்த திருமணத்தை மூன்று ஆண்டுகளுக்கு பதிவு செய்ய முடியாது.

துருக்கி

துருக்கி

துருக்கி குடியரசு ஒரு நாடாளுமன்ற ஜனநாயகமாகும். 18 வயதிற்கு மேற்பட்ட எல்லா துருக்கிய குடிமக்களும் வாக்களிக்கும் உரிமை உண்டு. 

பெரும்பாலான துருக்கிய குடிமக்கள் முஸ்லீம்களாக இருந்தாலும், துருக்கிய அரசு கடுமையாக மதச்சார்பற்றதாக உள்ளது.

இது கடுமையான சட்டங்கள் இருக்கும் ஒரு நாடாக இருக்கிறது. 1996 முதல் இங்கு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கள்ளக்காதலுக்காக தண்டிக்கப் படுகிறார்கள். 

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கள்ளக்காதலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை வழங்கபடுகிறது.

மாலி

மாலி

மாலியில் பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாகவே, உலகில் பிறப்பு சதவீதம் அதிகமுள்ள நாடுகளில் 3-வது நாடாக மாலி இருக்கிறது. 

தற்போது 2 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்நாடு 2035ல் இரட்டிப்பாக உயருமாம். 

சமீபத்தில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசய சம்பவமும் இங்கு தான் நிகழ்ந்தது. அவர்களின் சட்டங்கள் ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபடுகிறது. 

உதாரணத்திற்கு டோகன் பழங்குடியினரில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளப்பட்டது தான். ஆனால் கணவரின் உறவினர்களுடன் உறவில் ஈடுபடக்கூடாது.

சீனா

சீனா

சீனாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் துரோகம் செய்ததற்காக தண்டிக்கப் படுகிறார்கள். 

அங்கிருக்கும் சட்டங்களின்படி கள்ளக்காதல் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சொத்தில் பாதி பறிமுதல் செய்யப்படுகிறது.

ஈரான்

ஈரான்

ஈரான் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களுக்கு புகழ்பெற்றது. அதன்படி துரோகம் செய்த ஒரு பெண்ணை அங்கு கணவரால் கொல்ல முடியும். 

மேலும் இது அவரது கணவரால் மட்டுமல்ல, அவரது ஆண் உறவினர்களாலும் செய்யப்படலாம்.

வியட்நாம்

வியட்நாம்

வியட்நாமில் 2013-ல் ஒரு திருமண சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி கணவருக்கு துரோகம் செய்த மனைவி 1 முதல் 3 மில்லியன் டாலர் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

இந்தோனேஷியா

இந்தோனேஷியா

இந்தோனேசியாவின் மக்களில் பெரும்பான்மையோர் இசுலாமிய சமயத்தை பின்பற்றினாலும் இது இசுலாமிய நாடு அல்ல. 

மதச் சுதந்திரம் இந்தோனேசிய அரசியலமைப்பில் உள்ளது இந்தோனேஷியாவில் கள்ளக்காதல் கடுமையான குற்றமாகும், 

ஆனால் இங்கு மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. இங்கு கள்ளக்காதல் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

பப்புவா

பப்புவா

பப்புவா நியூ கினியாவில் விசுவாசமற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் உள்ளன. 

தன் மனைவியின் கள்ளக்காதலனை கணவர் தலையைக் கூட வெட்டலாம், ஆனால் பெண்கள் கொல்லப்படுவதில்லை, 

அதற்குப் பதிலாக அவர்களின் விரல்கள் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட அந்த விரலை அந்த பெண்ணின் காதலன் சாப்பிட வேண்டும்.

ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கா

சில ஆப்பிரிக்க பழங்குடியினரில் கள்ளக்காதலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. 

அதன்படி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களின் கருப்பை அவர்க்ளின் கணவரால் வெளியேற்றப்பட வேண்டும்.

இதனை தடுக்க வழி உண்டா..?

கள்ளகாதலை தடுக்க வழி உண்டா..?
வெறும் சட்டங்கள் மூலமாகவோ தண்டனைகள் மூலமாகவோ கள்ளக்காதலை குறைத்து விடமுடியாது. கள்ளக்காதலுக்கு முக்கியமானது 

சமூக காரணிகள். எனவே சமூக மாற்றமே கள்ளக்காதலை தடுக்க முடியும். திருடனாக பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

Tags:
Privacy and cookie settings