கொரோனாவால் இறந்தவரின் உடலை குவியலில் தேடி எடுக்கும் அவலம் !

0

தேனி மாவட்டம் சில்வார்பட்டியை சேர்ந்த பாலா என்பவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா நோய் காரணமாக தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டது. 

கொரோனாவால் இறந்தவரின் உடலை குவியலில் தேடி எடுக்கும் அவலம் !
இதனை அடுத்து அவர் கடந்த மே 30-ம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மே 31-ம் தேதி உயிரிழக்கவே, அவரது உடலை தருமாறு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

அதற்கு மருத்துவமனை நிர்வாகம் உடல் பிணவறையில் இருக்கிறது என்றும் நீங்களே போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பிணவறைக்கு சென்ற உறவினர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடல்கள், 

இரத்த விருத்திக்கும், இரத்த சுத்திகரிப்புக்கும் என்ன செய்வது?

எந்த விதமான அடிப்படை நெறிமுறைகளையும் பின்பற்றாமல் குவியலாக கிடந்துள்ளது. 

இந்த காணொளிகளும், புகைப்படங்களும் பல செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியது. உடலைக் கொண்டு செல்லக்கூட மருத்துவமனை நிர்வாகம் உதவவில்லை, 

முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லமால் தாங்களே உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மெதுவாக உண்டால் ஸ்லிம்மாக மாறலாம் !

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த அம்மருத்துவமனையின் டீன் பாலாஜிநாதன், ”தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றியே உடல்கள் உறவினர்களிடம் அளிக்கப்படுகிறது. 

கவனக் குறைவாக செயல்பட்ட கிரிஸ்டல் நிறுவனத்தின் தற்காலிக ஊழியரை பணிநீக்கம் செய்யச்சொல்லி உத்தர விட்டுள்ளோம், 

பணியில் இருந்த அரசு பணியாளர்கள் இரண்டு பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, 

துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இடப்பற்றாக் குறையின் காரணமாக உடல்கள் குவியலாக வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், “கொரோனாவால் உயிர் இழந்தோரின் உடல்கள் பிளாஸ்டிக் கவரால் கூட மூடாமல், விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வைத்திருப்பது குறித்து 

எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் பிணவறைக்குள் உறவினர்களை அனுமதித்தது தவறு எனக் கூறி 

பிணவறை காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்து உள்ளது அதிர்ச்சியும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் இறந்தவரின் உடலை தேடி எடுக்கும் அவலம் !

பெருந்தொற்று காலத்தில் முறையாக வழிமுறைகளை பின்பற்றாதது ஒரு புறம் இருக்க, இறந்த உடல்களுக்கு 

உரிய மரியாதையை அளிக்காமல் கவனிப்பார் அற்று வைத்திருப்பது மருத்துவமையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

இனிப்பில் இருக்கும் அபாயம் என்ன?

தினம் தினம் வடமாநிலங்களில் இப்படிப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும், 

இந்த அவலங்கள் அரங்கேறி இருப்பது சுகாதாரத்துறையின் நடவடிக்கை திறன் மீது கேள்விகளையே எழுப்புகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings