குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கபசுர குடிநீர்... தமிழக அரசு !

0

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கபசுர குடிநீர்
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த சித்தா மருந்தாக கபசுர குடிநீர் விளங்குகிறது. 

இந்த நிலையில் கபசுர குடிநீர் பாக்கெட்களை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

நெல்லையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

எனவே, கொரோனா தொற்று பாதித்து பலியாவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும், 

பதிவு செய்யப்பட்ட சித்த மருத்துவர்களை கொண்டு சித்தா சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இது மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது என கூறினர். 

மேலும், கபசுர குடிநீரின் நோய் எதிர்ப்பு திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறி, 

மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

கபசுரக்குடிநீரை யார் எவ்வளவு பருகலாம்?

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கபசுர குடிநீர்... தமிழக அரசு !

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் தினமும் கபசுரக் குடிநீர் பருக வேண்டும். மற்றவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு மாறுபடும். 

ஒரு வியாதியின் தாக்கம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது. ஒவ்வொருக்கும் உடல் நிலை வித்தியாசமானது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகள் தென்படும் நபர்கள் ஆகியோர் தினமும் மூன்று வேளை 40 எம்.எல் (ml) பருக வேண்டும்.

மருத்துவர்கள், மருத்துவமனையில் பணிபுரிவோர், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் என அதிகளவிலான பொது மக்களோடு அன்றாடம் பணிபுரிவோர், 

பாதிக்கப் பட்டவர்களோடு அதிக நேரம் செலவிடுவோர்கள் தினமும் ஒரு வேளை 40 முதல் 50 எம்.எல் பருகலாம்.

பாதிக்கப் பட்டவர்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர்கள், பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்ற நிலையில் இருப்பவர்கள் தினமும் இரு வேளை 40 முதல் 50 எம்.எல் பருகலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings