தங்கள் நாட்டிற்கு இந்திய குடிமக்கள் நேரடியாக செல்ல தடை விதித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் மட்டும் எப்படி சென்றார்.
எப்படி , ஏன் அமெரிக்கா சென்றார் என்பதை ரஜினிகாந்த் சார் தெளிவுபடுத்த வேண்டும் என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் (வயது 70) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். உடல் நலனை காரணம் காட்டி அரசியலில் இறங்கவில்லை.
ரஜினி அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபத்தல் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற போது அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டது
வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் செய்வது எப்படி?
இதையடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார்.
ஒரு தெரு முழுவதும் சேலத்து குழம்பு... சுவாரசியமான கதை !
அமெரிக்காவில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன..
மகள் ஐஸ்வர்யாவும் ரஜினிகாந்த் உடன் சென்றுள்ளார். ரஜினி அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.
அவர் தனது பதிவில், "மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் (கொரோனா காரணமாக) இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது.
இப்போது எப்படி இந்த பயணம் சாத்தியமானது ... தெளிவான தகவல்கள் இல்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி காரணம் இருக்கிறது.
ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் பணிபுரியும் அல்லது படிக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். எனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும்
விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாதது?
ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள்- இது இன்னும் கவலை அளிக்கிறது.
அவர்கள் வழக்கமான சோதனை என்று சொன்னார்கள்? மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது.
நான் அதைப் பற்றி எவ்வளவு அதிகமாக நினைக்கிறேனோ, அவ்வளவு மோசமாக இருக்கிறது.
நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !
மேலும் ரசிகர்களே, தயவுசெய்து 'ரஜினிகாந்திற்கு விதிகள் பொருந்தாது' போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம். அது மிகப்பெரிய விஷயம்.
அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப்பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" இவ்வாறு கஸ்தூரி சங்கர் தனது ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.
Thanks for Your Comments