பாடிபில்டராக காட்சி தரும் மனிதர்களை மிஞ்சிய கங்காரு !

1 minute read
0
கங்காரு பாலூட்டிகளில் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே 
விலங்கினம் கங்காருவாகும். 
ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் கங்காரு
இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. 

குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப்பையினுள்ளே இருக்கின்றது. கங்காரு இறைச்சியி்ல் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதால் மனிதர்களுக்கு நல்லதாகக் கருதப்படுகின்றது. 

இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. 

ஆனால் பாடிபில்டர் போல் இருக்கும் கங்காருவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாடிபில்டர் போல் இருக்கும் கங்காரு

பொதுவாக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை ஆண்கள் பலரும் விரும்புவர். தங்களது உடலை மிகவும் நன்றாக பராமரிக்க வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்த நிலையில் தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கங்காருவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெக்சாஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த கங்காருவை வளர்த்து வருகிறார். 

மிகவும் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் இருக்கும் கங்காருவின் புகைப்படத்தையும் வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கட்டுக் கோப்பான உடலமைப்புடன் இருக்கும் கங்காரு

மேலும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் கங்காரு உயிரினங்களை விட இந்த கங்காரு மிகவும் பெரியது எனவும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்த நிலையில் பலரும் கங்காருவின் உடலமைப்பு கண்டு ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

பலரும் இந்த கங்காருவின் உடலைப் போல தங்களுடைய உடலையும் மாற்ற வேண்டும் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 3, April 2025
Privacy and cookie settings