உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் அரபு நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலக நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் துபாய் நகரத்தை தேர்ந்தெடுத்து அங்கே வேலை செய்வதை விரும்புகிறார்கள்.
அப்பேற்பட்ட துபாய் நகரத்தை ஏன் போலி நகரம் என சிலர் குறிப்பிடுகிறார்கள் தெரியுமா? இங்கே வாழும் மக்களில் முக்கால் வாசி பேர் அயல் நாட்டை சேர்ந்தவர்கள் தான்.
தன் சொந்த நாட்டு மக்களை விட அயல் நாட்டு மக்கள் வசிக்கும் நகரங்களில் துபாய் முக்கிய பங்கு வகிக்கிறது. துபாயில் உள்ள பெரும்பாலான பணியாளர்கள் பிற நாடுகளிலிருந்து வந்து வேலை செய்பவர்கள்.
பணியாட்கள் தங்கியுள்ள இடங்கள் 1950 களில் கம்யூனிச ரஷ்யாவில் வாழ்ந்த மக்கள் வாழ்ந்த வீடுகளைப் போலவே கட்டப்பட்டுள்ளன.
இங்கே வாழும் துபாய் மக்கள் அயல் நாட்டு மனிதர்களிடம் நட்பாக பழகமாட்டார்கள். தங்கள் வேலை முடியும்வரை பழகிவிட்டு போலியான நட்பு பாராட்டுவார்கள்.
இங்கே வேலை செய்யும் வெளி நாட்டு மக்களுக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் அயல் நாட்டு கட்டிடங்களை போன்ற சாயலில் இருக்குமாம்.
இங்கு மக்கள் சாப்பிடும் உணவு முதல் ஷாப்பிங் செய்யும் மால்கள் வரை அனைத்தும் அமெரிக்கா நாட்டை போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றுவார்களாம்.
உங்களுக்கு ஒரு முறையாவது அங்கே செல்லலாம் என்று தோன்றுமாம். ஆனால் அங்கு சென்றபின் ஒரு இரவு கூட தங்க முடியாது என்கின்றனர் சுற்றுலா வாசிகள்.
எல்லா விஷயங்களையும் மற்ற நாட்டு விஷயங்களை போல காப்பி அடிப்பதால் இந்த நகரத்தை போலி நகரம் என்று சொல்கிறார்கள்.
மெட்ரோ ரயிலில் புதிதாக பயணிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுமாம். மெட்ரோ ரயிலில் 2 வகுப்புகள் உள்ளன. சாதாரண வகுப்பு, கோல்டன் வகுப்பு.
இங்கு மழை பெய்தால் சில மணி நேரங்களில் வெள்ளப் பெருக்கு கூட ஏற்பட்டு விடுமாம். இங்கு பொழுதுபோக்குக்கு பஞ்சம் இல்லை.
ஆனால் அங்கு வசூலிக்கப்படும் அதிக கட்டணங்களால் பெரும்பாலும் அவை காலியாகவே இருக்குமாம்.
பெரும்பாலும் அந்நாட்டவர்கள் அங்கு உங்களிடம் நண்பர்களாக இருக்க விரும்பமாட்டார்கள். பாத்து பேசிட்டு மட்டும் போய்டுவாங்க.
இது முழுவதும் வர்த்தகம் தொடர்பான நகரம் மட்டுமே. வாழ்வதற்கான நகரம் இல்லை. பிரச்சினைகள் அதிகம் உள்ளன. ஆனால் யாருமே அதை கண்டு கொள்ள மாட்டார்கள்.
Thanks for Your Comments