ஹிட்லரின் கழிப்பறை சாவியை வாங்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் !

0

மனிதனுக்கு இனவெறியும் குரூர எண்ணமும் ரத்த வேட்கையும் ஏற்பட்டால், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு வரலாறு நெடுக உதாரணங்கள் உள்ளன. 

ஹிட்லரின் கழிப்பறை சாவியை வாங்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் !

இதன் விளைவான சர்வாதிகாரம், ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைக்கும் சக்தி உடையது. உலகில் சர்வாதிகாரி என்றால் நம் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும் பெயர் ஹிட்லர்!

ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீடித்த இவருடைய சர்வாதிகார ஆட்சியில் ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுத்து பல நாடுகளை சுனாமியாகச் சுருட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். 

யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். 

1945 ஏப்ரல் 20, ஹிட்லருக்கு 56-வது பிறந்த தினம். தொடர்ந்து வந்த தோல்விச் செய்திகளால் உற்சாகமே இல்லாமல் இருந்தார் ஹிட்லர். 

ஏற்கெனவே இருவரை திருமணம் செய்திருந்த ஹிட்லர், ஏப்ரல் 28 அன்று 3-வது காதலி ஈவா பிரானை திடீர் திருமணம் செய்து கொண்டார். 

ஹிட்லரின் கழிப்பறை சாவி

ஏப்ரல் 30 அன்று ரஷ்யப் படைகள் பெர்லினில் புகுந்தன. அனைவரிடம் இருந்தும் விடை பெறுவதாகக் கூறி ஓர் அறைக்குச் சென்றார் ஹிட்லர்

ஈவாவுக்கு விஷத்தைக் கொடுத்து விட்டு, துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஹிட்லரின் தற்கொலையோடு சர்வாதிகாரம் மட்டுமல்ல, அடுத்த சில வாரங்களில் இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது. அவரைப் பற்றி இன்றும் கூட ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. 

அவருக்கு மனநோய் ஏற்பட்டதால்தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டதாக ஆய்வாளர்களில் சிலர் கூறுகின்றனர். ஆனால், எப்படியிருந்தாலும் ஹிட்லரின் வாழ்க்கை ரத்த சகதியால் ஆனது. 

ரத்த சகதியால் ஆன ஹிட்லரின் வாழ்க்கை

அப்படிப்பட்ட ஹிட்லரின் கழிவறை சாவி பிரித்தானிய விமானி ஒருவரால் 76 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சாவி நினைத்த பார்க்க முடியாத தொகைக்கு ஏலம் போயுள்ளது.

பிரித்தானியாவின் கெண்ட் நகரில், சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆன்லைன் ஏலதாரர்கள் கலந்து கொண்ட, இந்த ஏலத்தில், குறித்த சாவியானது, சுமார் 14,000 பவுண்ட்டிற்கு ஏலம் போயுள்ளது.

இது 300 பவுண்ட்டிற்கு ஏலம் போவது பெரிய விஷயம் என்று நினைத்து பார்த்த நிலையில், இந்த தொகை அந்த நபருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இரண்டாம் உலகப் போரின் முடிவில் Berlin விடுவிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியா விமானப்படை அதிகாரி ஒருவர், ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுள்ளார்.

விமான, Lieutenant A.A Williams என்று அறியப்படும் அந்த நபர், இந்த சாவியை ஒரு நினைவுப் பொருளாகாக வைத்திருக்க முடிவு செய்துள்ளார். 

Lieutenant A.A Williams

அதன் படி அது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அதில், கடந்த 1945-ஆம் ஆண்டு ஹிட்லரின் சொந்த மேசையின் டிராயரில் இருந்து, 

அவர் பயன்படுத்தி வந்த சொந்த கழிப்பறை சாவியை எடுத்தேன், உலோகத்தால் இது ஆனது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இது கடந்த 1980-90-களில் லண்டனில் இருக்கும் ஒரு சிறிய அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

அப்போது இதைக் கண்ட தனியார் சேகரிப்பாளர் (அரிய வகை பொருட்களை வாங்கி சேர்ப்பவர்) ஒருவர் வாங்கியுள்ளார்.

இப்போது அதை, அவர் Ashford with C&T ஏலத்தில் விற்றுள்ளர். இதை அவர் வெறும் 300 பவுண்ட்டிற்கு தான் ஏலம் போகும் என்று நினைத்துள்ளார். 

ஆனால், அவர் நினைத்து பார்த்ததை விட அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளது.

கடுமையாக போட்டி போட்ட ஆன்லைன் ஏலதாரர்கள்

பிரித்தானியாவின் கெண்ட்டில் நடந்த இந்த ஆன்லைன் ஏலத்தில், பிரித்தானியவை சேர்ந்த ஏலதாரர்கள் மற்றும் ஜேர்மனை சேர்ந்த சிலரும் இதை வாங்க போட்டி போட்டதால், இதன் ஏல விலை கடுமையாக உயர்ந்தது.

இது குறித்து Ashford with C&T நிபுணர் மத்தேயு ட்ரெட்வென் கூறுகையில், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் ஆன்லைன் ஏலதாரர்கள் 

இதை வாங்க கடுமையாக போட்டி போட்ட தால், இதன் விலை இந்த அளவிற்கு உயர்ந்து விட்டது. 

நாங்கள் கொடுத்த மதிப்பீட்டு தொகையை விட அது இவ்வளவுக்கு விற்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது, 

இதனால் நாங்களும் விற்பனையாளரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம், என்று கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings